மகேந்திரன் நிற்கின்றான். அவனுடைய மனைவியர் இருவர் பக்கத்தில் நிற்கின்றனர். அவனது முகத் தோற்றம் உறுதியான மனத்தினை வெளியிடக் கூடியதாகக் காட்டப் பட்டுள்ளது. இம்மூவருடைய முடிகளும், பல்வேறு அணிகளும், உடைகளும் சிற்பிகளின் சிற்பத் திறமையை நன்கு புலப்படுத்துகின்றன.
மாமல்லபுரத்துப் பாறைச் சிற்பங்கள் இதிகாச புராண நிகழ்ச்சிகளைக் குறிப்பவை. ஒரு பெரிய பாறைச் சிற்பத்தில் வேதியனொருவன் தண்ணீர்க் குடத்தைச் சுமந்து செல்லுதல், மான் ஒன்று நீர் அருந்த ஆற்றுக்கு வருதல், ஆற்றுக்கு அப்பால் இரண்டு அன்னங்கள் நீராட விரும்பி நிற்றல், முனிவர் பலர் தவம் புரிதல், அவர்களைப் பார்த் துப்பூனை ஒன்று தன் பின்கால்களில் நின்று யோக நிலையில் நிற்றல், எலிகள் அச்சமற்றுப் பூனையைப் பணிதல் முதலிய காட்சிகள் கவின் பெறக் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு காண்பவர் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கத் தகும் எழில் மிகு சிற்பங்கள் பல மாமல்லபுரத்தில் இருக் கின்றன.
சிவபெருமான் ஆடிய பலவகை நடனங்கள் காஞ்சி கயிலாசநாதர் கோவிலிலும், மதங்கீசர் கோவிலிலும் சிற்ப அமைப்பில் காட்டப்பட்டுள்ளன. இச்சிற்ப வேலைப் பாடு நேரில் கண்டு களிக்கத்தக்கது. பல்லவர் வரலாற் றைத் தொடக்கம் முதல் விளக்கிக் காட்டும் சிற்பக் காட்சிகள் காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிற் சுவர் களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மிக வியந்து பாராட்டத் தகுவன. மாமல்லபுரத்து ஒற்றைக் கற் கோவிற் புறச் சுவர்களின்மீதுள்ள உருவச் சிற்பங்கள் பேரெழிலும் பண்பட்ட வேலைப்பாடும் கொண்டவை. தனிக் கல்லில் செய்யப்பட்டுள்ள யானை, சிங்கம் முதலி. யன சிற்பக் கலைத்திறனை அளந்து காட்டும் கருவிகளாக அமைந்துள்ளன.
35