பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழரால் புதுப்பிக்கப் பெற்ற கோவில்களில் சோழர் காலச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆறடிக்கு மேற் பட்ட உயரமுடைய வாயிற்காவலர் உருவச் சிலைகளும் நான்கு கை வாயிற் வாயிற் காவலர் உருவச் சிலைகளும் சோழர் காலத்தவை. சர்க்கரைப் பொட்டணம் போன்ற அமைப்புடைய குல்லாய் அணிந்த உருவச் சிற்பங்கள் விசய நகர காலத்தவை. இப் பலவகைச் சிற்பங்களும் தொண்டைநாட்டுக் கோவில்களில் காணப்படுகின்றன.

இசைக்கலை

'இசை' என்னும் சொல்லுக்கு இசைவிப்பது என்பது பொருள். அஃதாவது, இசை எல்லா வகை உயிர்களையும் தன் வயப்படுத்த வல்லது என்பதாகும். பாம்பு மகுடி இசைக்கு மயங்குவதும், ஏற்றக்காளைகள் தெம்மாங்கு இசை கேட்டுத் துன்பமின்றி வேலை செய்வதும் இசைச் சிறப்பைப் புலப்படுத்தும் சான்றுகளாகும்.

சங்ககாலத் தமிழர் இசைப் பயிற்சி மிக்குடையவர்; அதனாற்றான் இசைத் தமிழ்' என ஒரு பகுதியை அமைத்துக் கொண்டனர்; பிறப்பு முதல் இறப்பு வரை யில் இசைப்பாடல்களையே பெற்றிருந்தனர். பல்லவர்கள் இசையின் சிறப்பை நன்கு உணர்ந்தவர்கள். மகேந்திர வர்மன் இசைக் கலையில் பெரும் புலவன் என்பதை மாமண்டூர்க் கல்வெட்டும், குடுமியான்மலைக் கல்வெட்டும் தெளிவுறுத்துகின்றன. பல்லவர் காலத்தில்தான் தமிழ் யாழொடு வீணையும் வழக்கிற்கு வந்தது. இராச சிம்மன் இசைக்கலையில் வல்லவன். 'வாத்திய வித்தியாதரன்' என் பது அவனது விருதுப் பெயராகும். அவனுக்கே 'ஆதோத் திய தும்புரு', 'வீணா நாரதன்' என்ற விருதுப் பெயர்களும் இருந்தன. அவன் எடுப்பித்த கயிலாசநாதர் கோவிலில் பலவகை இசைக் கருவிகளையும் இசைவாணர்களையும் சிற்ப உருவில் காட்டியுள்ளான்.

36