பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலத்தில் பாடப்பெற்ற நாயன்மார் திருப்பதிகங்கள் தமிழ்ப் பண்களைக் கொண்டவை. அக்காலத்துப் பெருங் கோயில்களிலெல்லாம் இசைவாணிகள் இருந்து இசைக்கலையை வளர்த்தனர் என்று தேவாரம் செப்புகிறது. காஞ்சி முத்தீசுவரர் கோவில் போன்ற பல கோவில்களில் ஆடல் பாடல்களில் வல்ல மகளிர் இருந்தனரென்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. யாழ், வீணை, குழல், கின்னரி, கொக்கரி, சச்சரி, தக்கை, முழவம், மொந்தை, மத்தளம், தமருகம், துந்துபி, குடமுழா, தத்தலகம், முரசம், உடுக்கை, தாளம் முதலிய இசைக் கருவிகள் அக்கால வழக்கிலிருந்தன என்று தேவாரப் பாடல்கள் எடுத்தோதுகின்றன. விசயநகர வேந்தர் காலத்தில் தொண்டை நாட்டில் கருநாடக இசை பரவத் தொடங்கியது. அதன் பயனாகத் தமிழிசையும் தமிழ்ப் பாடல்களும் வழக்கு வீழத் தொடங்கின.

நடனக்கலை

சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த கூத்துக்கலை பல்லவர் காலத்தில் வளர்ச்சியுற்றது என்று சொல்லலாம். பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மன் அருங்கலை விநோதன்' என்று பாராட்டப் பெற்றான். மகேந்திரன் நாட்டியக் கலையில் பெரிதும் ஈடுபாடுடையவன். இராச சிம்மன் என்னும் பல்லவ மன்னன் நடனக் கலையின் மேன்மையை நன்குணர்ந்தவன். அவன் தன் பெரும் பொழுதை அதற்கென்றே செலவழித்தவன். அக்கலையில் தன் உள்ளத்தைப் பதியவைத்த அவன், காஞ்சியில் கயி லாசநாதர் கோவிலைக் கட்டினான் ; கயிலாசநாதர் கோவி லில் சிவனார் ஆடிய பதாகை நடனம், ஊர்த்துவ நடனம் முதலிய நடன வகைகளைச் சிற்ப அமைப்பிற் காட்டி அழியாப் புகழ் பெற்றான். பலவகை நடிகையர் உருவங்

37