களும் அக்கோவிலில் செதுக்கப்பட்டுள்ளன. காஞ்சீபுரத்தில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோவிலில் கூத்தர், கூத்தியர் உருவங்கள் இரு சிற்பங்களில் செதுக்கப் பட்டுள்ளன. ஆடவரும், பெண்டிரும் சேர்ந்து ஆடிய நடனங்களும் அக்காலத்தில் இருந்தன என்பதற்கு அச் சிற்பங்கள் சான்று பகர்வனவாகும்.
பல்லவர் காலத்தில் தோன்றிய சைவத் திருமுறை களில் இறைவனாடிய பலவகைக் கூத்துக்கள் இடம் பெற்றுள்ளன. பாடல் பெற்ற சிறந்த கோவில்களிலிருந்து நடன மாதர் நடனக் கலையை வளர்த்துவந்தனர். நாயன்மார் காலமாகிய பல்லவர் காலத்தில் தில்லைப்பெருமான் 'நடராசன்' என்று நாயன்மாரால் பாராட்டப்பட்டான். தில்லைப் பெருமானின் திருக்கூத்தினைப் புகழ்ந்து நாயன் மார்கள் பல பாக்கள் பாடியுள்ளனர். பல்லவர் காலத்தில் கோவிலில் நடன மாதர்கள் இருந்தனர் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் பல உள்ளன. அவர்கள் 'கணிகை. யர்', 'மாணிக்கத்தார்' எனப்பட்டனர். காஞ்சி முத்தீசுவரர் கோவிலில் மட்டும் நாற்பத்திரண்டு பேர் இருந்து இசை, கூத்துக்களை வளர்த்தனர் என்று கல்வெட்டுக் கூறுகின்றது.
சோழர் காலத்தில் சைவ வைணவ சமயங்கள் மிகுந்த அளவில் வளர்ச்சிபெறத் தொடங்கின. ஆதலால் பெரும் பாலான கோவில்களில் நடன மாதர் இடம் பெற்றனர். நடனக் கலை நாளொருமேனியும் பொழுதொரு வண் ணமுமாக வளர்ச்சி பெற்றது. இவ்வளர்ச்சி விசயநகர வேந்தர் ஆட்சிக் காலம் முடிய இருந்துவந்தது. பிற்பட்ட நூற்றாண்டுகளில் இவ்வளர்ச்சி ஒடுங்கிவிட்டது. இன்றுள்ள கோவில்களில் நடன மாதர் இருந்து இவ்வருங் கலையை வளர்க்கும் வாய்ப்பு இல்லாது போய்விட்டது.
38