'காவிரியில் புதுப்புனல் பெருக்கெடுத்துப் பாய்வதால் உழவர்கள் பெரு மகிழ்வுடன் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். மதகுகளின் வழியே நீர் ஓசையுடன் பாய்ந்தோடுகிறது. நீர்ப் பெருக்கின் மிகுதியால் கரைகள் உடைகின்றன. அதனால் காவிரி நீர் பேரிரைச்சலுடன் ஒருபுறம் ஓடுகின்றது. நம்பியரும் நங்கையரும் புதுப் புனலாடி ஆரவாரிக்கின்றனர். இவ்வண்ணம் பலவகை ஒலிகள் ஒன்றாகக் கலந்து ஆர்ப்பக் காவிரி அன்னை நடந்து வருகின்றாள்.' இந்த அழகிய காட்சியினை ஒரு பாடலில் ஓவியமாக்கி அளிக்கின்றார் ஆசிரியர் இளங்கோ வடிகள்:
உழவர் ஓதை; மதகு ஓதை; உடைநீர் ஓதை; தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி.
பொருநராற்றுப்படை
காவிரியின் வற்றாத வளம் பொருநராற்றுப்படை என்னும் நூலில் பின்வருமாறு பேசப்படுகின்றது:
'கோடை வெப்பத்தின் மிகுதியால் மரம் செடி கொடிகள் கருகினாலும், மேகம் கடலில் நீரை முகக்க மறப்பினும், மழை வளமில்லாது பெரியதொரு பஞ்சமே ஏற்படினும், காவிரி தன் வளம் சுரத்தலில் தவறாது. காவிரியின் வளத்தால் சோழ நாட்டில் வயல் வளம் சிறந்துள்ளது; உழவர்கள் செம்மையாகத் தங்கள் கடமைகளை முடித்து நெல்லை மலையெனக் குவிக்கின்றார்கள்; அவர்தம் இல்லங்களில் உள்ள நெற்குதிர்கள் நெல் நிரம்பி உள்ளன. இவ்வாறு சோழ நாட்டில் காவிரியின் அருளால் ஒரு வேலி ஆயிரம் கலமாக விளைகின்றது.'
தனிப்பாடல்
காவிரியாற்றினை விளக்கவல்ல தனிப்பாடல் ஒன்றும் ஆறு' என்ற பெயர் காவிரி நமக்குக் கிடைத்துள்ளது.
40