யையே குறிக்கும் சிறப்புப் பெயராக அமைகின்றது என் றும், காவிரி பாய்வதால் செல்வவளம் மிக்கு விளங்கும் சோழநாடே 'நாடு' எனப்படும் என்றும், அத்துணைச் சிறப்பையுடைய காவிரி நாட்டை ஆள்பவனே 'வேந்தன்' எனப்படுவான் என்றும் அத்தனிப் பாடல் பேசுகின்றது:
தண்ணீரும் காவிரியே ; தார்வேந்தன் சோழனே; மண்ணாவதும் சோழ மண்டலமே
என்பது அத்தனிப் பாடல்.
காவிரியின் தோற்றமும் போக்கும் புலவர் பலரால் புகழப்பட்டதும் வற்றாத வளம் கொழிப்பதும் ஆகிய காவிரியாறு சையமலை (பிருமகிரி) என்னும் குன்றிலிருந்து தான் தோன்றுகின்றது. சைய மலை குடகு நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குன்று. காவிரியாறு தோன்றியதிலிருந்து இந்நாள் வரையும் சையமலையில் நீரூற்றுத் தடைப்படா மல் சுரந்த வண்ணம் உள்ளது. இந்த இடைவிடாச் சுரப்புத்தான் காவிரியாற்றுக்கு 'உயிர் ஆறு' என்னும் புகழை அளித்துள்ளது.
குடகு நாட்டு மக்கள் காவிரி தோன்றும் இடத்தில் முப்பது அடி சதுரமான குளம் ஒன்று அமைத்துள்ள னர். அக்குளத்தில் எப்பொழுதும் இரண்டரை அடி ஆழமே நீர் நிறைந்திருக்கும். இதற்குத் தலைக்காவிரி என்பது பெயர். இஃது இங்கிருந்து புறப்பட்டு 475 கல் சென்று கடலிற் கலக்கின்றது.
கிருஷ்ணராஜ சாகரம்
தலைக்காவிரியிலிருந்து புறப்படும் காவிரி காடுகளையும், மலைகளையும் கடந்து, மைசூர் நாட்டிற் புகுந்து, பல சிற்றாறுகளைச் சேர்த்துக்கொண்டு வளர்ச்சி பெற்றுக் கிருஷ்ணராஜ சாகரம் என்னும் பெயருடன் பெரிய நீர்த் தேக்கமாய் அமைகிறது. இது மைசூர் நாட்டின் வளத்
41