பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துக்குக் காரணமாய் அமைந்துள்ளது. இதன் மறுமுனை யில்தான் கண்ணம்பாடி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பிருந்தாவனம் என்னும் அழகிய பூங்கா அமைந் துள்ளது.

கண்ணம்பாடி அணையால் கட்டுப்படுத்தப்பட்ட காவிரி மிக்க விரைவுடன் கிழக்கு நோக்கிப் பாய்கின்றது. இடை யிடையே சிறிய தீவுகளையும் தன் நெறியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அத்தீவுகளில் பெரியது சீரங்கப்பட்டணம் என்பது.

சிவசமுத்திர அருவி

தன் வழியில் பல துணையாறுகளைப் பெற்றுச் செல்லும் காவிரி, சிவசமுத்திரம் என்னும் இடத்தில் இரு கிளை களாகப் பிரிந்துவிடுகிறது. மேற்கில் உள்ள அருவி 'ககன சுதி' எனப்படும். கிழக்கில் உள்ளது 'பார்சுகி' எனப் படும். இவ்விரண்டும் மூன்று கல் தொலைவு ஓடுகின்றன; பின்னர், சுமார் 300 அடி ஆழத்தில் அருவிகளாய் வீழ்ந்து வடகிழக்குப் பகுதியில் ஒன்று கூடுகின்றன. இவ்வருவிக ளின் நீரைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. பின்னர்க் காவிரி குறுகிய மலைக்குடைவின் வழியே ஓடுகின்றது. இங்குப் பல துணை ஆறுகள் அதனிற் கலக்கின்றன. பின்பு காவிரியாறு, சேலம், கோயம்புத்தூர் எல்லை கள் மைசூர் எல்லையைத் தொடுமிடத்தில் மைசூர் நாட்டை விட்டு நீங்குகிறது.

மேட்டூர் அணை

காவிரி மைசூர் நாட்டை விட்டு நீங்கியதும் சிறிது தொலைவில் புகழ்பெற்ற ஹொகெனகல் நீர்வீழ்ச்சி உள் ளது. ஹொகெனகல் நீர்வீழ்ச்சியைத் தாண்டிக் காவிரி பல படியாகத் திரும்பி ஓடுகிறது. இங்குச் சின்னாறு, தோப்பூராறு என்பன இதனிற் கலக்கின்றன. பின்பு காவிரி சீதாமலைத் தொடருக்கும், பாலமலைத் தொடருக்


42