பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும் இடையில் பாய்ந்து செல்கின்றது. இங்குத்தான் உலகப் புகழ்பெற்ற மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து காவிரி திருச்சிராப்பள்ளியை அடைவதற்குள் பவானி, நொய்யல், மணிமுத்தாறு, அமராவதி என்னும் துணையாறுகளை வழியிற் பெற்று, வரவர அகற்சி அடைகிறது.

அகண்ட காவிரி

திருச்சிக்கு மேற்கே ஒன்பது கல் தொலைவிலுள்ள இல மனூர் என்னும் இடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் என்னும் கிளையாறு பிரிகின்றது. இதுகாறும் பிரிவுபடாத காவிரியின் இப்பகுதிக்கு 'அகண்ட காவிரி' என்னும் பெயர் வழங்குகின்றது. குளித்தலைக்குச் சற்று வடக்கில் காவிரியுடன் கரை போட்டானாறு என்னும் சிற்றாறு கலக் கின்றது. இங்குக் கொள்ளிடத்தின் குறுக்கே மேலணை என்னும் சிறந்த அணை கட்டப்பட்டுள்ளது.

கல்லணை

காவிரியாறு கிழக்கு நோக்கிப் பதினேழு கல் ஓடின பின்பு கொள்ளிடம் இதன் அருகில் நெருங்கி வருகிறது. உள்ளாறு என்னும் வாய்க்கால் இவ்விரண்டையும் இணைக் கிறது. அவ்விடத்தில் காவிரிக்குக் குறுக்கே கல்லணை என் னும் அணை கட்டப்பட்டுள்ளது. இவ்வணை சோழ மன் னன் ஒருவனால் கட்டப்பட்டது; ஆயின், அண்மையில் சிறந்த முறையில் மாற்றங்கள் பல செய்யப்பட்டு 'கிராண்டு அணைக்கட்டு' என்னும் புதிய பெயரைப் பெற்றுள்ளது.

காவிரிப்பூம்பட்டினம்

பின்பு காவிரியாறு பல கிளையாறுகளுடன், திருவை யாறு, சுவாமிமலை, கும்பகோணம், மாயூரம் முதலிய இடங்களுக்குப் பெருவளத்தை அளித்து, இறுதியில் காவிரிப்பூம்பட்டினம் என்னும் சிற்றூருக்கு அருகில் கட


43