பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்துப் பார்த்து, அவற்றிற்குத் தக்கவாறு விடை எழுதி அனுப்புபவர் திருவாய்க் கேள்வி என்பவர் அரசன் கூறிய வற்றைக் கேட்டுத் திருமந்திர - ஓலையிடம்: அறிவிப்பவர். திருமந்திர ஓலை என்பவர் திருவாய்க் கேள்வி கூறிய வற்றை ஓலையில் எழுதுபவர். இவர்கட்குத் தலைவர் திருமந்திர ஒலை தாயகம் எனப்படுவர். கரும மாராயம் என்பவர் அரச காரியங்களை முட்டு இன்றி நடத்துபவர் தலை நகரிலிருந்து வழக்கு ஆராய்ந்து நீதி வழங்குபவர் அறங் கூறவையத்தார் எனப்பட்டனர்.

படை

சோழ மன்னர் ஏனைய மன்னரைப்போலவே பண்டைக் கால முறைப்படி நால்வகைப் படைகளையும் வைத்திருந்தனர். பிற்கால்ச் சோழரிடம் யானைப்படை மிகுந்து காணப்பட்டது. வில் வீரரைக் கொண்ட படைகள் பல இருந்தன ; வாளி வீரரைக் கொண்ட படைகள் பல; வேல் வீரர் "படைகள் "பல. பெருநாட்டின் பல பகுதிகளிலிருந்து, ஆங்காங்கு அமைதியை நிலைநாட்டி வந்த படைகள் பல. அவை நிலைப்படைகள் எனப்பட்டன. சோழரது கடற்படை மிக்க வன்மை வாய்ந்தது. சோழர் அப்படையின் உதவிகொண்டே 'கடல்கடந்த நாடுகளை வென்றனர். அயல் நாடுகளில் வாணிகம் செய்த தமிழர்களுக்கு அக்கப்பற் படை உதவியாக இருந்தது. சோழ மன்னர் பண்பட்ட பெரும் நிலப்படையைப் பெற்றிருந்த காரணத் தால்தான், தென்னிந்தியா முழுமையும் சோழராட்சியில் அடங்கியிருந்தது. இப்படையின் வீரச்செயல்களை யெல்லாம் கலிங்கத்துப்பரணியில் பரக்கக் காணலாம்.

நாட்டின் உட்பிரிவுகள் . சோழப் பெருநாடு பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ, நாடு, கோழ மண்டலம் எனவும், பாண்டிய: நாடு இராசராசப் பாண்டி மண்டலம் எனவும்,

50