________________
சேர நாடு மலை மண்டலம் எனவும், கொங்கு நாடு அதி ராசராச மண்டலம் எனவும், தொண்டை நாடு சயங் கொண்ட சோழ மண்டலம் எனவும், ஈழ நாடு மும் முடிச் சோழ மண்டலம் எனவும் பெயர் பெற்றிருந்தன. ஒவ்வொரு மண்டலமும் வளநாடு, கூற்றம், ஊர் எனப் பிரிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் 'நாடு' என்பது 'கூற்றம்', எனவும் வழங்கி வந்தது. ஒவ்வொரு நாடும் பல ஊர்களைக் கொண்டது. அக்காலத்தில் ஓர் ஊரைக் குறிக்க வேண்டுமானால், மண்டலம் - வளநாடு நாடு-ஊர் என்ற முறையில் குறித்தல் வேண்டியிருந்தது.
ஊராட்சி
'ஊரில் உள்ள அனைவரும் ஊர் அவையினரைத் தேர்ந்தெடுத்துத் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது ஊராட்சி முறையாகும். ஊரில் உள்ள அனைவரும்.ஊர் அவையினரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உடையவரே யாவர். ஊரில் உள்ள 'குடும்பு' ஒன்றுக்கு ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரே 'ஊரவையார்' என்பவர். தேர்தல் நடைபெறும் நாளில் அரசியல் தலைவர் ஒருவர், அவை கூடுவதற்கான மாளிகையில் ஊரார் அனைவரையும் கூட்டுவர். கூட்டத்தின் நடுவில் குடம் ஒன்று வைக்கப்படும். ஒவ்வொரு குடும்பினரும் தம் குடும்புக்கு ஏற்ற ஒருவர் பெயரைத் தனித்தனி ஓலையில் எழுதிக் குடத்தில் இடுவர். இவ்வாறு எல்லாக் குடும்பினரும் குடவோலை இடுவர். பின்னர், ஊர்த் தலைவர் சிறுவன் ஒருவனை அழைத்து அவற்றுள் ஒன்றை எடுப்பிப்பார்; அதனை அவர் கிராமக் கணக்கனிடம் தருவார். அவன் தன் கையில் ஒன்றும் இல்லை என்பதை அவையோர்க்குக் காட்டி, யாவரும் கேட்க அதில் எழுதப்பட்டுள்ள பெயரை51