________________
உரக்க வாசிப்பான். பின்னர், அதனை அங்குள்ள அறிஞரெல்லோரும் வாசிப்பர். இறுதியாக அப்பெயர் ஓர் ஓலையில் வரையப்படும். இத்தேர்தல் முறை குடவோலைத் தேர்தல் முறை எனப்பட்டது.
அக்காலத்தில் ஒவ்வோர் ஊரிலும் எழுதப்படும் ஆவணங்களைக் காப்பிட ஆவணக்களரி இருந்தது. ஆவணங்கள் பனை ஓலைகளில் எழுதப்பட்டன. என்றும் பயன் படக்கூடிய சமயத் தொடர்பான ஆவணங்கள் கோவிற் சுவர்களில் பொறித்து வைக்கப்பெற்றன.
கோவில்களுக்கு வரி இன்றி விடப்பட்ட நிலங்கள் 'தேவதானம்' எனவும், பிராமணர்க்கு விடப்பட்டவை 'பிரமதேயம்', 'பட்டவிருத்தி' எனவும், அறநிலையங்களுக்கு விடப்பெற்றவை 'சாலாபோகம்' எனவும், புலவர்க்கு அளிக்கப்பெற்றவை 'புலவர் முற்றூட்டு' எனவும் பெயர் பெற்றன.
பல்லவர் காலத்துக் கோவில்கள் சோழர் காலத்துக் கற்றளிகளாக மாற்றப்பெற்றன. புதிய பெரிய கோவில்கள் கட்டப்பெற்றன. கோவில்களில் மாதந்தோறும் விழா நடைபெற்றது. கோவிலுக்கு நிலங்களும், பொருள்களும் மிகுதியாக வழங்கப்பெற்றன. இவ்வளர்ச்சிகளால் கோவிலாட்சி விரிவடைந்தது. கோவில்களைக் கவனிக்க சாங்க உயர் அலுவலர் இருந்தனர்.
அறங்கூறவையம்
நியாய விசாரணை செய்தலும் அறநிலையங்களை மேற்பார்வை இடுதலும் சம்வத்சர வாரியார் கடமை. இவர்களே நீதிமன்ற வேலையைக் கிராமங்களிற் செய்துவந்தனர். வழக்கில் இருதிறத்தார் கூற்றுகளும் ஆட்சி, ஆவணம், அயலார் காட்சி என்பன கொண்டு கவனிக்கப்பட்டன. ஊர்ச்சபையை அடுத்திருந்த ஆவணக்களரியில் மூல ஓலைகள் பத்திரப்படுத்தப்பட்டிருந்தன. அவை52