பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைக்கப்பட்ட இடம் 'அரண் தரு காப்பு' எனப்பட்டது. 'படி ஓலை', 'மூல ஓலை' என்பவற்றைச் சோதித்து வழக்குகள் முடிவு செய்யப்பட்டன.

சோழர் இலச்சினை

வரலாறு தெரிந்த நாள்முதல் புலி இலச்சினை சோழர்க்கு உரியது என்பது தெரிகிறது. கரிகாலன் இமயத்தில் புலி (இலச்சினை) பொறித்து மீண்டான் என்றும், காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பண்டப் பொதிகள்மீதும் இறக்குமதி செய்யப்பட்ட பண்டப்பொதிகள்மீதும் புலி இலச்சினை இடப்பட்டது எனவும் சிலப்பதிகாரம் செப்புகின்றது. பிற்காலச் சோழர் பட்டயங்களிலும் புலி இலச்சினை காணப்படுகின்றது.

நாணயங்கள்

பொன்னாலும் செம்பாலும் செய்யப்பட்ட காசுகள் வழக்கில் இருந்தன. காய்ச்சி உருக்கினும் மாற்றுக் குன்றாதது என்று அதிகாரிகளால் ஆராய்ந்து உறுதிசெய்யப்பட்டதற்கு அடையாளமாகத் துளையிடப் பெற்ற 'துளைப் பொன்'னும் வழக்கிலிருந்தது. சோழர் கால நாணயங்கள் 'பொன்' என்றும், 'மாடை' என்றும், 'காசு' என்றும் பெயர் பெற்றிருந்தன. 'அன்றாடு நற்காசு' என்பது குறிப் பிட்ட ஓர் அரசன் காலத்தில் வழக்கிலிருந்தது. அக்காசு தோன்றுவதற்கு முன்பு வழக்கிலிருந்தது 'பழங்காசு' எனப்பட்டது. இக்காசுகளுக்குப் பின்னால் 'கங்கை கொண்ட சோழன்', 'மலை நாடு கொண்ட சோழன்' என்றாற் போன்ற சோழர்தம் விருதுப் பெயர்கள் குறிக்கப் பெற்றிருந்தன. சோழருக்கு அடங்கிய ஈழநாட்டுக் காசு ஈழக்காசு' என வழங்கியது. ஈழத்து வழக்கிலிருந்த 'கருங்காசு' என்பதும் சோழப் பெருநாட்டில் வழங்கியது.

அளவைகள்

ஒவ்வோர் ஊரிலும் இருந்த நிலங்கள் அரசாங்க அலுவலரால் அளந்து வரி விதிக்கப்பட்டன. பதினாறு சாண்53