________________
நீளமுடைய கோல் கொண்டு நிலம் அளக்கப்பட்டது. அஃது 'உலகளந்த கோல்' எனப்பட்டது. நிலத்தின் மிகச் சிறு பகுதியும் விடாமல் அளக்கப்பட்டது. நிலத்தை அளந்து எல்லை அறிந்து அங்குப் புள்ளடிக்கல் நடுவது வழக்கம். நெல், அரிசி,பால்,தயிர்; முதலியன செவிடு, ஆழாக்கு, உழக்கு,உரி, நாழி,குறுணி, பதக்கு, தூணி, மரக்கால், கலம் என்னும் முகக்கும் கருவிகளால் அளக் கப்பட்டன. இராசகேசரி மரக்கால், அருமொழி. நங்கை மரக்கால் என்பன அரசன் அரசியின் பெயர் பெற்ற அளவைகள். ஆடவல்லான் மரக்கால் என்பது தஞ்சைப் பெரிய கோவிலில் இருந்தது. நடராசப் பெருமானுக்கு 'ஆடவல்லான்' என்பது பெயர். சர்க்கரை, மிளகு. முதலியன பலத்தால் நிறுக்கப்பட்டன. தோரை, விரல், சாண், முழம் என்பன நீட்டல் அளவைப் பெயர்கள். மணி, பொன், வெள்ளி முதலிய உயர்ந்த பொருள்கள் கழஞ்சு, மஞ்சாடி, குன்றி என்னும் நிறை கற்களால் மதிக்கப்பட்டன.
வரிகள்
நிலவரி காணிக்கடன் எனப் பெயர் பெற்றது. இது நெல்லாகவோ நாணயமாகவோ செலுத்தப்பட்டது. கடன், கூலி,இறை,பாட்டம், பூட்சி என்பன வரிகளை உணர்த்தும் சொற்கள். சோழர் காலத்தில் கண்ணாலக் காணம், குசக்காணம், நீர்க்கூலி, தறியிறை, தரகு, தட்டாரப்பாட்டம், இடைப் பாட்டம், ஓடக்கூலி, செக்கிறை,வண்ணாரப் பாறை, நல்லா, நல்லெருது, நாடுகாவல், உல்கு; ஈழம் பூட்சி முதலான பலவகை வரிகள் இருந்தன. இவை முறையே திருமண வரி, குலாலர் வரி, நீர் வரி,தறி வரி, தரகு வரி, தட்டார் வரி, இடையர் வரி, ஓடக்காரர் வரி, செக்கார் வரி, வண்ணார் வரி, பசு வரி, எருது வரி; நாடு காவல் வரி, சுங்க வரிகள், இறக்க வரி எனப் பொருள் படும்.
54