பெரிய புராணத்தைத் திறம்படச் செய்தார். இதன்கண் தமிழகத்து ஊர்கள் பலவற்றின் விவரங்கள், பலதிறப்பட்ட மக்களின் பழக்க வழக்கங்கள், கடல், காடு,மலை, ஆறு, சேரி,நுளைப்பாடி முதலியவற்றின் வருணனை, சைவ வழிபாட்டு முறைகள், சமயப் போராட்ட விவரங்கள், தென்னிந்திய வரலாற்றுக்கு உறுதுணையான குறிப்புக்கள் என்பன எளிய தமிழ் நடையில் குறிக்கப்பட்டுள்ளன.
கம்பராமாயணம்
இது மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் செய்யப்பட்டது. இதனைச் செய்தவர் கம்பர். இவர் மாயூரத்தை அடுத்த திருவழுந்தூரில் பிறந்தவர்; சடையப்ப வள்ளல் என்ற செல்வரால் ஆதரிக்கப்பட்டவர். இவர் வடமொழியில் உள்ள வால்மீகி ராமாயணம், பால ராமாயணம், காளிதாசன் செய்த ரகுவம்சம் என்னும் வடமொழி நூல்களின் துணை கொண்டு தமிழில் இராமாயணம் பாடியுள்ளார் என்று அறிஞர் கூறுவர்.
இவர் வடமொழியில் கூறப்பெற்ற இராம காதையைப் பொதுவாகப் பின்பற்றினார்; ஆனால் பல இடங்களில் தமிழ் நாட்டுக் காட்சிகளையே வடநாட்டுக் காட்சிகளாக அமைத்துப் பாடியுள்ளார். கோசல நாட்டு வருணனை சோழ நாட்டு வருணனையேயாகும்; 'சரயு' ஆற்றின் வருணனை காவிரி ஆற்றின் வருணனை என்றே சொல்லலாம். சனகன் வைத்திருந்த வில்லை வளைப்பதற்குமுன் இராமன் சீதையைக் காணவில்லை என்பது வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் கம்பர், இராமன் வில்லை வளைப்பதற்கு முன்பே சீதையைக் கண் டான், சீதையும் இராமனைக் கண்டாள், இருவரும் ஒரு வரையொருவர் விரும்பினர் என்று தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்கேற்ப ஒரு காட்சியைப் புகுத்தியுள்ளார் ; இவ்வாறே கிஷ்கிந்தா காண்டத்தில், தமிழ் மரபுக்கு60