அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்த நூல்களையும் பாடியுள்ளார்; சிவஞானபோதம் என்னும் சைவ சித்தாந்த நூலுக்கு மிகச் சிறந்த-பேருரை வரைந்துள்ளார்.
சரபோஜி மன்னர்
தஞ்சையை ஆண்ட மகாராட்டிர மன்னருள் சரபோஜி மன்னர் குறிப்பிடத்தக்கவர். இவர் சோழ நாட்டில் கிடைத்த-பனை ஓலைகளில் எழுதப்பெற்ற - தமிழ் நூல்களையும்,வடமொழி நூல்களையும் திரட்டினார்; தமது அரண்மனையுள் 'சரசுவதி மகால்' என்ற மண்டபத்தில் அவற்றை அழகுபெற வைத்தார்: இவர் திரட்டிய நூல்களில் இலக்கிய நூல்கள் பல ; இலக்கண நூல்கள் சில; மருத்துவ நூல்கள் பல; இசை நூல்கள் பல; நூல்கள் சில்; சோதிட நூல்கள் சிலவாம். இம்மன்னர் காலத்தில் கும்பகோணத்தை அடுத்த கொட்டையூரில் சிவக்கொழுந்து தேசிகர் என்ற சைவப்புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் 'கோடீச்சுரக் கோவை' என்ற ஒரு கோவை நூலைப் பாடியுள்ளார்; சரபோஜி மன்னர் மீது 'குறவஞ்சி நாடகம்' ஒன்றையும் திறம்படப் பாடியுள்ளார்.
இங்ஙனம் காவிரி அன்னையின் பாலுண்டு வளர்ந்த பைந்தமிழ்ப் பாவலர் பாடிய நூல்கள் பலவாகும். அவற்றுள் சோணாட்டுத் தல புராணங்கள் என்பன குறிக்கத்தக்கவை. ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு புராணம் பாடப் பெற்றுள்ளது.சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியதில் புராணங்கள் பல. அவற்றுள் மாயூரத்தல் புராணம், திருநாகைக் காரோணப் புராணம் என்பன குறிப்பிடத்தக்கவை;62