பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கலைச் சிறப்பு


கலையுணர்ச்சி

மக்கள் உள்ளத்திலிருந்து வெளித்தோன்றும் கலையுணர்ச்சியாலேதான் கவின்மிக்க தோன்றின. அசந்தாக் குகைச் சிற்பங்கள், எல்லோராக் குகைச் சிற்பங்கள், காந்தாரச் சிற்பங்கள், அமராவதிச் சிற்பங்கள், ஆகிய அனைத்தும் மனித உள்ளத்து எழுந்த கலையுணர்ச்சியின் படைப்புக்களே யாகும்.

கட்டடக்கலை

மக்களது நாகரிகத்தை. அறிவிப்பனவற்றுள் கட்டடக்கலையும் ஒன்றாகும் நாம் பண்டைக்கால கட்டடக்கலையைப் பற்றி அறிய வேண்டுமாயின், அழியாமல் இருக்கும் இக்காலக் கோவில்களைக் கொண்டே அறிதல் வேண்டும். அவை கற்கோவில்களாக இருப்பின் நெடுநாள் நிலைத்திருக்கும். நமது தமிழகத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதலே கருங்கற்கோயில்கள் தோன்றின. அதற்கு முன் இருந்த கோயில்களும் மாட மாளிகைகளும், அரண்மனைகளும் பிறவும் அழியத்தக்க மண், மரம், சுண்ணாம்பு செங்கல் இவற்றால் ஆனவை

இராசராசேச்சுரம்

சோழப் பேரரசர்களின் கட்டடக்கலைத்திறனை நமக்கு அறிவித்து நிற்பவை அவர்கள் கட்டுவித்த கோயில்களே ஆகும். அவற்றுள் தஞ்சை இராசராசேச்சுரம், கங்கை கொண்ட சோழேச்சுரம், தாராசுரத்தில் உள்ள ஐராவ தேசுவரர் கோவில் என்பன குறிக்கத்தக்கவை. இராஜராஜ சோழனால், ஆறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படதுதான் தஞ்சைப் பெரிய கோவில் கோயிலைச்சூழ ஆழமான அகழி ஒன்று இருந்தது. கோயில் மதில், கோட்டை மதிலின் அமைப்பைக் கொண்டது. இரண்டு சிறிய கோபுரங்களைக் கடந்து உட்சென்றால், கருங்கல்லும்63