பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லை நிலம்

காடும் காடு சார்ந்ததும் ஆகிய முல்லை நிலத்தில் பசும் புல் தரைகளே மிகுதியாக இருக்கும். அவை கால்நடை களுக்கு ஏற்ற இடங்கள். எனவே, ஆடுமாடுகளை மேய்ப் பவர்களுக்கே முல்லை நிலம் ஏற்றதாகும். முல்லைநில ஆடவர் பகல் முழுவதும் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருப்பர்; மாலையில் அவற்றுடன் வீடு திரும்புவர். முல்லைநில மகளிர் பால் கறத்தல், பாலைக் காய்ச்சித் தயிராக்குதல், தயிரைக் கடைந்து மோராக்குதல், வெண் ணெய் எடுத்தல், நெய் காய்ச்சுதல், இவை அனைத்தையும் எடுத்துச்சென்று பிற நிலங்களில் விற்று, வேண்டும். பொருள்களை வாங்கிக்கொண்டு மீளுதல் ஆகிய வேலை களில் ஈடுபட்டிருப்பர். எனவே, இம் முல்லைநில மக்க ளிடமும் கல்விவளர்ச்சியையோ உயர்ந்த கலைவளர்ச்சி யையோ எதிர்பார்த்தல் இயலாது.

நெய்தல் நிலம்

கடலும் கடல்சார்ந்தநிலமும் ஆகிய நெய்தல் நிலத்தில் மீன் பிடிக்கும் பரதவரே வாழ்கின்றனர். அவர்கள் கட்டு மரங்களில் ஏறிக்கொண்டு, பல கல் தொலைவில் கடலிற் சென்று, மீன் பிடித்து வருபவர். அங்ஙனம் பிடிக்கப் பட்ட மீன்களை விற்று, உணவுக்கு வேண்டும் பொருள் களை வாங்கி வாழ்பவர். எனவே, நாள் முழுமையும் வயிற்றுப் பிழைப்புக்கே வாடி வதங்கும் இம்மக்களிடமும் கல்விவளர்ச்சியையோ, கலைவளர்ச்சியையோ எதிர்பார்த் தல் பொருத்தமன்று.

பாலை நிலம்

நீர்வளமற்ற பாலை நிலத்தில் சிறிய குடிசைகளை அமைத் துக்கொண்டு வேட்டுவர் வாழ்வர். இந்நிலத்தில் பயன் தரத்தக்க விளைச்சல் மிகக் குறைவு. ஆதலின் இந்நில மக்கள் வழிச் செல்வோரைக் கொள்ளையடிப்பதும் வள

6