பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடனக்கலை

பழந்தமிழ் மக்கள் மேற்கொண்டிருந்த சில கூத்து வகைகளைத் தொல்காப்பியம் குறிக்கின்றது. அவைவெறிக் கூத்து, கருங்கூத்து, வள்ளிக்கூத்து, கழனிலைக்கூத்து முதலியனவாகும். இவையேயன்றி ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி முதலியனவும் இருந்தன. துணங்கை என் னும் கூத்துப் பண்டைக் காலத்து நிகழ்ந்த ஒன்று. இக் கூத்து, இரண்டு கைகளையும் முழங்கை வரை முடக்கி விலாப்புடைகளில் ஒற்றி அடித்துக்கொண்டு பெயர்ந்து களித்து ஆடும் ஒருவகைக் கூத்து ஆகும்.

விறலியர்

வள்ளல்களிடத்தும் மன்னர்களிடத்தும் சென்று தன் னுடைய ஆடற்புலமை தோன்றவும், உள்ளக் குறிப்பைப் புறத்து வெளிப்படுத்தும் மெய்ப்பாட்டோடு ஆடும் நடன மகளே விறலி எனப்பட்டாள். விறலியரைச் சோழமன் னர் தக்கவாறு ஆதரித்து ஊக்குவித்தனர். 'சோழன் நலங்கிள்ளி விறலியர்க்கு மாட மதுரையையும், வஞ்சி மாநகரையும் தருவான்' என்று கோவூர் கிழார் என்னும் புலவர் கூறியுள்ளார்.

சோழர்கள் புதுப்பித்த பழைய கோவில்களிலும் கட்டிய புதிய கோவில்களிலும் பிறமண்டபங்களிலும் அமைந்துள்ள நடனச் சிற்பங்கள் வியந்து போற்றும் சிறப்புடையன. நடன மாதர் தனித்திருந்து ஆடும் கூத்தும் பலவகைகளில் சிற்ப உருவில் காணப்படுகின் றது. பிற்காலச் சோழர்கள் நாடாண்டபோது நடன மகளிர் மிகப் பலராகக் கோவில்களில் இடம் பெற்றிருந் தனர். அவர்கள் ‘கணிகையர்', 'மாணிக்கத்தார்' எனப் பலவாறு பெயர் பெற்றிருந்தனர். 'அருட்பாடல்'களின் பொருளை அபிநயத்தாற் புலப்படுத்தி நடித்து அம்மாதரசி யர் பொது மக்கள் உள்ளங்களில் சமயப்பற்றை ஊட்டி னர். நடன ஆசிரியர் சோழ மன்னரால் மதிக்கப் பெற்70