றனர்; மானியங்களும் பட்டங்களும் பெற்றுச் சிறக்க வாழ்ந்தனர். பெரிய புராணம், கம்பராமாயணம் என் னும் இரண்டு நூல்களிலும் நடனக் கலையைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன்.
கற்பகப்பூந் தளிரடிபோய்க் காமருசா ரிகைசெய்ய உற்பலமென் முகிழ்விரல்வட் டணையோடும் கைபெயரப் பொற்புறுமக் கையின்வழிப் பொருகயற்கண் புடைபெயர அற்புதப்பொற் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடினார்.
-பெரிய புராணம்
- நெய்திரள் நரம்பிற் றந்த மழலையின் இயன்ற பாடல் தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்கக் கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல ஐயநுண் இடையார் ஆடும் நாடக அரங்கு கண்டார்.
-கம்பராமாயணம்
பெருங்கோவில் கோபுர வாயில்களில் உள்ள மிக்க உயரமான கற்சுவர்களில் பலவகை நடனங்கள் செதுக் கப்பட்டுள்ளன. இவை விசய நகர வேந்தர் காலத்தன என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். அவர்கள் காலத்திலும் நடன மகளிர் கோவில்களில் இருந்து நட னக் கலையை வளர்த்து வந்தனர் என்பது கல்வெட்டுக் களால் அறியப்படுகிறது. தஞ்சையை ஆண்ட மகாராட் டிரர் காலத்திலும் இக்கலை நன்கு வளர்ந்தது. சோழ நாட்டிற்றான் நடன ஆசிரியர் பலராக இன்றும் இருந்து வருகின்றனர் என்பதும், இன்றைய நடன மாதர் பலரும் அவ்வாசிரியரிடமே பயின்றனர் என்பதும் இங்கு அறியத் தகும்.71