பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. வையைக் கரை நாகரிகம் 1. வையையாறு


இலக்கியத்தில் வையை

வையையாறு வடபாண்டி நாட்டுக்கு உயிர்நாடி. இவ் வாறே தென்பாண்டி நாட்டுக்குப் பொருநையாறு உயிர் நாடியாகும். காவிரியாறு தமிழிலக்கியங்களில் பேசப் பட்டிருத்தல் போலவே இவ்விரண்டு யாறுகளும் பாராட் டப்பட்டுள்ளன. வையையாறு பற்றிய விவரங்களைப் பரி பாடல், சிலப்பதிகாரம், திருவிளையாடற் புராணம் இவற் றில் விரிவாகக் காணலாம். வையைக் கரையில் உள்ள திருப்பூவணம் என்னும் சிவத்தலம் பற்றிய பாடல்களி லும் இவ்யாற்றைப்பற்றிய செய்திகளைக் காணலாம். ஈண்டு எடுத்துக்காட்டாகப் பரிபாடலில் கூறப்பட்டுள்ள செய்திகளுட் சிலவற்றைக் காண்போம்:

'மேகங்கள் கடல் நீரை உண்டு வானத்திற் சென்று மழையாகப் பொழிகின்றன. அங்ஙனம் மலைமீது விழும் நீர் மலையின் மாசினைக் கழுவுவதுபோல மலையின் எல் லாப் பக்கங்களிலும் சென்று நிலத்தை அடைகிறது. இங்ஙனம் மலையிலிருந்து விழும் நீர் பல கால்களாக ஓடி வையை என்னும் உருவத்தை அடைகின்றது. வையை யாற்று நீர், பகைவர் நாட்டை நோக்கிச் செல்லும் பாண் டியர் படை ஆரவாரத்தோடு போவது போலப் பேரிரைச்ச லோடு செல்கின்றது. இங்ஙனம் இங்ஙனம் பெருக்கோடு செல் கின்ற ஆறு, தன் போக்கிலுள்ள பலவகை மரங்களை வேரோடு சாய்த்துக் கொண்டு செல்கிறது; கணவன் மீது ஊடலுற்ற மனைவி அவனைக் கடந்து நீங்குவது போலத் தன் போக்கிலுள்ள அணைகளை முறித்துக்கொண்டு போகின்றது. உடலில் பூசப்பெறும் பலவகை மணப் பொருள்கள் உடலுக்கு மணம் தருதல்போல ஆற்றில்72