________________
அடித்துச் செல்லப்பெற்ற பலவகை மணமலர்கள் ஆற்று நீருக்கு நல்ல மணத்தை நல்குகின்றன.
'வெள்ளம் வருவதற்கு முன் சிறு பெண்கள் மணலில் பாவை செய்தும் சிற்றில் அமைத்தும் விளையாடிக்கொண் டிருந்தனர். வெள்ளம் வந்துவிட்டதால் பாவையும் சிற் றிலும் அழிந்துபட்டனவே என்று அச்சிறுமிகள் கண் ணீர் விட்டு அழுகின்றனர். ஊரைக் கடல் சுற்றுவது போலச் சிற்றூர்களை வையையின் வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது. மற்றொருபால் நாற்றங்கால் வண்டலிட்டு மேடாகின்றது; பிறிதோரிடத்தில் வயல்கள் வெள்ளத்தில் மூழ்குகின்றன.
'கரையை அடுத்துள்ள சிற்றூர் மக்களும் பேரூர் மக்க ளும் மகிழ்வோடு வையை நீரை வரவேற்கின்றனர். சிலர் மகிழ்ச்சிப் பெருக்கால் தாம் அணிந்த அணிகளோடு நீர் விளையாட்டை விரும்பி நீராடுகின்றனர். விரைந்து செல் லும் வையை நீர் அங்ஙனம் நீராடும் மகளிருடைய கை வளையல்களையும், தலைக் கோலத்தையும், பிற அணிகளை யும் கவர்ந்து செல்கின்றது. மகளிர் ஒருவர்மீது ஒருவர் நீர் இறைத்து ஆடுதலால் அவர்கள் கண்கள் சிவக்கின் றன. சில நீர்த்துறைகளில் அரங்கு ஏறிய தலைக்கோல் மகளிரும் பாணரும் ஆடலைத் தொடங்குகின்றனர். அப் பொழுது உண்டாகும் இசைக் கருவிகளின் முழக்கமும் கரைமோதி இழியும் ஆற்று நீரின் ஒலியும் ஒன்று சேர்ந்து பேரோசை எழுப்புகின்றன.
"பீடுமிக்க மாட மதுரையை அணைத்தாற்போல அமைந் துள்ள வையையாற்றுப் பகுதியில் வெள்ளம் பெருகுகின் றது. அரசியல் அலுவலாளர் பறை அறைந்து கரைக் காவலரை அழைக்கின்றனர். வையையின் புதுப்புனலில் நீராட விரும்பி மதுரை மாநகரத்தார் ஆற்றை நோக்கி அணியணியாகச் செல்கின்றனர்; எருது பூட்டப்பெற்ற வண்டியில் சிலர் போகின்றனர்; சிலர் குதிரைகள் மீதும், 73