பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிலர் பெண் யானைகள்மீதும் செல்கின்றனர். சிலர் பல் லக்கிற் போகின்றனர்.


'நீராடி மகிழ்ந்த செல்வர் வையையை வாழ்த்தும் அறிகுறியாகப் பொன்னாற் செய்த மீன், நண்டு, இறால் இவற்றை வெள்ளத்தில் போட்டு மகிழ்கின்றனர். ஆடவர் வாழைத் தண்டின் உதவியால் நீர்மேல் தாவிச் செல்கின் றனர் ; ஒரு சிலர் ஓடத்தில் ஏறி ஆற்றுப் போக்கில் போகின்றனர். இவ்வாறு ஆடவரும் பெண்டிரும் தத்தம் மனம்போல நீரில் விளையாடுகின்றனர்.

'வறுமையால் வாடுகின்ற புலவரது நீட்டிய கை நிறை யப் பொன்னைச் சொரிந்த பாண்டியனைப் போலவே வையை வயலின்கண் பொன்னைப் பரப்புகின்றது, வையைக்கு இவ்வியல்பு என்றும் இருப்பதாகுக! இசைக்கு உரிமையுடைய பாணரும் கூத்தரும் வையையை ஏத்தித் தொழுவாராகுக! என்றும் மக்களை இன்புறுத்தும் பண் பும், காக்கும் இயல்பும் வையையிடம் நிலைபெறுவன் வாகுக!' என்று நீராடி மகிழ்ந்த மைந்தரும் மகளிரும் வையைக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.

வையையின் தோற்றமும் போக்கும்

மதுரை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் கொடைக் கானல் தாலுகாவும் அதற்குத் தெற்கில் பெரியகுளம் தாலுகாவும் அமைந்துள்ளன. கொடைக்கானல் தாலுகா மலைகள் நிரம்பியது. அம்மலைகளின் தொகுப்புப் பழனி மலைத்தொடர் எனப்படும். பெரியகுளம் தாலுகாவில் மேற்கு மலைத்தொடர் கிழக்கிலும் மேற்கிலும் பரவியிருக் கின்றது. கிழக்குப் பகுதி மலைத்தொடர்க்கு வருஷநாடு- ஆண்டிப்பட்டி மலைத்தொடர் என்பது பெயர்; மேற்குப் பகுதி மலைத் தொடர்க்கு 'மேற்கு மலைத்தொடர் ' என்ற பழம் பெயரே இருந்து வருகிறது.74