பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பழனி மலைத் தொடரில் ஆறுகள்

பழனி மலைத்தொடரில் பன்றியாறு (வராக நதி), மஞ்ச ளாறு, பாம்பாறு, அய்யம்பாளையம் ஆறு என்பன தோன் றித் தெற்கு நோக்கிப் பாய்கின்றன. இவற்றுள் பன்றி யாறு பெரியகுளம் என்னும் நகரின் வழியாய்ப் பாய்ந்து பாம்பாற்றில் கலக்கிறது. இங்ஙனம் பன்றியாறு கலக்கப் பெற்ற பாம்பாறு தென்கிழக்காகப் பாய்கிறது. மஞ்ச ளாறு என்பது வத்தலக்குண்டு வழியாகத் தெற்கு நோக் கிப் பாய்ந்து, அய்யம்பாளையம் ஆற்றில் கலந்து விடு கிறது. இங்ஙனம் இங்ஙனம் மஞ்சளாறு கலக்கப்பெற்ற அய்யம் பாளையம் ஆறு தெற்கு நோக்கிப் பாய்கின்றது.

வையை ஆறு

வருஷ நாடு-ஆண்டிப்பட்டி மலைத்தொடர் விய மரங்களைக் கொண்ட காடுகள் செறிந்தது; கொடிய விலங்குகளைக் கொண்டது. மக்கள் வாழ்வதற்குத் தகுதி யற்றது. இவ்வருஷ நாடு-ஆண்டிப்பட்டி மலைத்தொடரே வையையின் தோற்றுவாய். இதன் பள்ளத்தாக்கிலேயே பல சிற்றாறுகள் வையையில் வந்து கலக்கின்றன. வையை அவற்றை ஏற்றுக்கொண்டு வடக்கு நோக்கிப் பாய்கின்றது.

வீரவனாறு-சுருளியாறு

மேற்கு மலைத் தொடருக்கும் வருஷநாடு-ஆண்டிப்பட்டி மலைத் தொடருக்கும் இடையில் அமைந்துள்ள நிலப் பகுதி கம்பம் பள்ளத்தாக்கு எனப்படும். இப்பள்ளத்தாக் கின் தென்மேற்குக் கோடியில் மேற்கு மலைத்தொடரும் வருஷநாடு - ஆண்டிப்பட்டி மலைத்தொடரும் ஒன்று சேரு கின்றன. மேற்கு மலைத்தொடரின் தென் மேற்குப் பகுதி யில் பெய்யும் மழை நீர் கம்பம் பள்ளத்தாக்கில் வீரவ னாறு என்னும் பெயருடன் பாய்கிறது. அவ்யாறு, கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள வருஷநாடு ஆண்டிப்பட்டி75