பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான இடங்களில் களவு செய்தலும் சிறப்புத் தொழில் களாகக் கொண்டுள்ளனர். இம்மக்களிடமும் நாக ரிகத்தை எதிர்பார்த்தல் தகுதியன்று.

மருத நிலம்

இனி, எஞ்சி நிற்பது வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலம் ஒன்றே. இந்த நிலப்பகுதி ஆற்று வளத்தால் அழகு நிறைந்து விளங்குகின்றது. உழவர் நிலத்தைப் பண்படுத்திப் பயிர் செய்கின்றனர். நெல் முதலிய பலவகைப் பொருள்களைப் பயிராக்குகின்றனர். சமு தாயத்தில் ஒருசார் மக்கள் இங்ஙனம் உழைத்தாலும், எஞ்சியோர் அப்பலனை நுகர்கின்றனர். உணவுக்குப் பஞ்சமில்லாத மருத நிலத்தில்தான் மனிதனது அறிவு வளரத் தலைப்படுகிறது. இங்குத்தான் மனிதனுக்கு ஓரளவு ஓய்வு கிடைக்கிறது ; பொருளை ஈட்டுவதற்குரிய வழிகள் புலப்படுகின்றன ; கல்விவளர்ச்சியும் கலைவளர்ச் சியும் தோன்றி வளர்கின்றன. இவ்வுண்மையை அடுத்து வரும் பகுதிகளிற் காண்போம்.

7