________________
அரசனது கடமை என்ற உணர்ச்சி முதலியன நன்கு புலப்படும்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 'என் மீது படையெடுத்து வந்த பகைவரை வெல்லேனா யின், எனது குடைநிழற்கீழ் வாழ்வார் தாங்கள் சென் றடையும் நிழல் அறியாது, "எம் வேந்தன் கொடியன்" என்று கருதிக் கண்ணீரைப் பரப்பிப் பழி தூற்றும் கொடுங்கோலை உடையேன் ஆகுக', என்று சூளுரைத் தான்.
இச்சூளுரையால், குடிகள் மனம் வருந்தாத நிலையில் ஆளுபவனே அரசன் என்னும் உண்மையை அவன் நன் குணர்ந்திருந்தான் என்பதை நாமறியலாம்.
இவனே அச்சூளுரையின் பின்னுரையாக 'ஓங்கு புகழ் தாங்கிய மாங்குடி மருதனார் முதலிய புலவர் பெருமக்கள் எனது நாட்டைப் பாடாது ஒழிவாராக. வறியவர்க்கு உதவி செய்ய முடியாத வறுமையை நான் அடைவேனாக', என்று கூறுகின்றான். இக்கருத்தமைந்த இவனது செய் யுள் புறநானூற்றில் எழுபத்திரண்டாம் பாடலாக உருப் பெற்றுள்ளது. இவன் புலவரை மதிக்கும் திறனும் புலவர் புகழ் பெறாத புரவலன் பயனற்றவன் என்னும் இவனது கருத்தும் இப்பின்னுரையிலிருந்து புலனாதல் காண்க.
மானவுணர்ச்சி
ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் தன் மனைவி கோப்பெருந்தேவி கொண்ட ஊடலைப் போக்க எண்ணி அந்தப்புரம் நோக்கி விரைந்து சென்றான். அப்போது பொற்கொல்லன் குறுக்கிட்டு அரசியின் காணாமற்போன காற்சிலம்பைக் களவாடிய கள்வன் தானேவந்து அகப் பட்டதாகக் கூறினான். தேவியின் ஊடல் போக்க வேண் டும் என்ற கருத்துடன் சென்ற மன்னன், பொற்கொல் லன் கூறியதை முற்றும் கேட்டு ஆராயாமல், 'கொன்று சிலம்பு கொணர்க' என்று பணித்தான். 80