________________
பொற்கொல்லன் பேச்சை நம்பிக் குற்றமற்ற கோவலனைக் கொல்வித்தது தவறு என்பதை உணர்ந்தவுடன், நெடுஞ்செழியன் பெரிதும் வருந்தினான். அவன்,
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன், யானே கள்வன் ; மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது; கெடுகஎன் ஆயுள்
என்று வருந்திக் கூறினான்; கூறித் தன் அரியணையிலிருந்து மயங்கி விழுந்தான்; விழுந்தவன் மீண்டும் எழவில்லை. மானவுணர்ச்சி அவன் உயிரையே கொண்டது. மன் னன் இறந்தான் என்பதைக் கண்டதும் அவன் மனைவி கோப்பெருந்தேவியும் இறந்தாள்.
இடைக்காலப் பாண்டியர்
சங்க காலத்து இறுதியில் பாண்டிய நாடு களப்பிரர் என்னும் வேற்றரசர் ஆட்சிக்குட்பட்டது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டுவரை பாண்டியர்கள் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தனர். அவர்கள் அடிக்கடி பல்லவர்களுடன் போரிட்டு வந்தனர்; சோழர்களோடு மணவுறவு கொண்டிருந்தனர். அவருள் நெடுமாறன் என்பவன் குறிக்கத்தக்கவன். அவன் திரு ஞானசம்பந்தர் காலத்தவன்;சோழன் மகளான மங்கையர்க்கரசியார் என்பவரை மணந்துகொண்டவன்;சம்பந்தரால் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்ட வன். மற்றொரு பாண்டியன் முதல் வரகுணன் என்பவன். இவன் மாணிக்கவாசகர் காலத்தவன்; சிறந்த போர்வீரன் ; உயர்ந்த பக்திமான்.
பிற்காலப் பாண்டியர்
கி.பி. 900 முதல் கி.பி.1200 வரையிலும் இருந்த பாண்டிய மன்னர்கள் சோழப் பேரரசிற்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்துவந்தனர். பதின்மூன்றாம் நூற் 81