________________
றாண்டில் பாண்டியர் பேரரசராகிச் சோழரைச் சிற்றரசர் களாக்கிவிட்டனர். இக்காலத்தில் வாழ்ந்த முதல் சடைய வர்மன் குலசேகர பாண்டியன், முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன், இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டி யன், முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன், முதல்மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பவர் புகழ் மிக்கவர். இப்பாண்டியர்கள் சேர சோழரை வென்று பெரு நாட்டை ஆண்டனர். முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி. பி. 1268-1311) காலத்தில் இத்தாலி நாட்டுவெனிசு நகரத்தானாகிய மார்க்கோ போலோ என்பவன் பாண்டிய நாட்டில் பல நகரங்களைப் பார்வையிட்டான். அவன், 'நான் பாண்டிய நாட்டிற்குச் சென்ற பொழுது அங்கு பாண்டியர் ஐவர் ஆண்டு வந்தனர். அவருள் குலசேகர பாண்டியனே மூத்தவன். அவன் தன் தலைநகரில் பெரும் பொருள் சேர்த்து வைத்திருந்தான். அவனைச் சேர்ந்தவர் சிறந்த அணிகலன்களை அணிந் திருந்தனர். அவன் தன் நாட்டை நடுவு நிலைமையுடன் ஆண்டு வந்தான். வாணிகம் செய்வோரிடத்தும் பிறநாட்டு மக்களிடத்தும் அவன் பேரன்புடன் நடந்து வந்தான்", என்று தன் நூலில் குறித்துள்ளான்.
பாண்டியர்க்குப் பின்
இவனுக்குப் பின் மாலிக்-காபூர் படையெடுப்பு ஏற்பட்டது. பின்பு பாண்டிய நாட்டில் விசயநகர ஆட்சி ஏற் பட்டது. அதன் பின்பு விசுவநாத நாயக்கரை முதல் அரசராகக் கொண்ட நாயக்கராட்சி தோன்றியது. நாயக்க மன்னர்கள் கோட்டை கொத்தளங்களை அமைத்து நாட்டை நன்முறையில் ஆண்டு வந்தனர். அவர்கள் ஏற்படுத்திய சிற்றூர்கள் பல; எடுப்பித்த கோவில்கள் பல ; புதுப்பித்த கோவில்களும் பலவாகும். மதுரை மீனாட்சியம்மன் கோவில் நாயக்க மன்னரால் புதுப்பிக்கப்பட்டது. மதுரைப் புது மண்டபம், திருமலை
82