________________
தூதர் என்பவர் அரசன் ஆணைபெற்று அரசகாரியங்களை வேற்றரசரிடம் சென்று தெரிவிப்பர். சாரணர் என்பவர் ஒற்றர். கரணத்தியலவர் என்பவர் அரசாங்கப் பெருங்கணக்கர். கருமவிதிகள் என்பவர் அரசாங்கத் தொடர்பான பலதுறைக் காரியங்களை நடத்தும் தலைவர்கள். கனகச்சுற்றம் என்போர் அரசாங்கப் பொருள்காப் பாளர்கள். நாடுகாவல் அதிகாரிகள் கடைகாப்பாளர் எனப்பட்டனர். நகரமாந்தர் என்பவர் நகரப் பெருமக் கள். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாய் இருக்கவேண்டும். இவர்கள் கடமையுணர்ச்சி மிக்கவர்களாகப் பணியாற்றினர்.
சங்ககாலத்திற்குப் பிற்பட்ட பிற்பட்ட காலத்தில் பாண்டிய நாட்டு அரசியல் அதிகாரிகள் பலர் இருந்தனர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கருங்கக் கூறின், சோழ ராட்சியில் இருந்த அரசியல் அலுவலாளர் அனைவரும் பாண்டிய நாட்டு அரசியலிலும் இருந்தனர் என்று கூறு தல் பொருந்தும். சோழ வேந்தர் தம் அரசியல் அதி காரிகளுக்குப் பல பட்டங்கள் வழங்கிப் பாராட்டினாற் போலவே பாண்டிய மன்னரும் தம் அதிகாரிகளுக்குப் பல பட்டங்கள் வழங்கிப் பாராட்டினர். அரையன், பேர ரையன், தென்னவன் பிரமராயன், தென்னவன் தமிழ வேள், ஏனாதி,காவிதி, பஞ்சவன் மாராயன், பாண்டியன் மூவேந்த வேளான் என்பன அப்பட்டங்களுள் சிலவாம்.
படை
பாண்டிய வேந்தரிடம் யானைப் படை, குதிரைப் படை, தேர்ப்படை, காலாட் படை ஆகிய நான்கும் இருந்து வந்தன. அரேபியாவிலிருந்து குதிரைகள் பாண்டிய நாட்டிற்கு வருவிக்கப்பட்டன. கொற்கை, தொண்டி முதலிய கடற்றுறைப் பட்டினங்களில் ஆண்டுதோறும் பதினாயிரம் குதிரைகள் வந்திறங்கின என்று 'வாசம்'
84