________________
என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். பாண்டிய மன்னர் குதிரைகள் வாங்குவதில் பெரும் பொருளைச் செலவிட்டு வந்தனர் என்று மார்க்கோ போலோ எழுதியுள்ளார். அரசனைக் காப்பதற்கென்றே தனிப்படைகள் இருந்தன. தென்னவன் ஆபத்துதவிகள் ' என்பது அப்படைகளின் பெயர்.
நாட்டுப் பிரிவுகள்
பாண்டிய நாடு பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந் த்து ; 'நாடு', 'கூற்றம்' என்று சில இடங்களில் வழக்குப் பெற்றிருந்தது. பின் நூற்றாண்டுகளில் சில நாடுகளைத் தன்னகத்துக் கொண்டு விளங்கிய பெருநிலப்பரப்பு 'வள நாடு' என வழங்கப் பெற்றிருந்தது. கொற்கையைச் சூழ்ந்த பெருநிலப்பகுதி மதுரோதய வளநாடு எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு நாடும் பல ஊர்களைக் கொண்டது.
ஊரவை முதலியன
பாண்டியர் ஆட்சியில் ஊர்தோறும் ஊரவை இருந்தது. சோணாட்டில் நடைபெற்ற ஊராட்சியே பாண்டிய நாட்டி லும் நடைபெற்றது, ஊர்தோறும் ஆவணக்களரி இருந் தது. சோழ நாட்டில் இருந்தாற்போலவே பிரமதேயம் முதலிய மறையவர் ஊர்கள் இருந்தன. தேவதானமாக விடப்பட்ட ஊர்கள் சிலவும் இருந்தன. சிவன் கோவி லுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லைகளில் திரிசூலம் பொறிக்கப்பெற்ற கற்கள் நடப்பட்டன ; பெருமாள் கோவிலுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லைகளில் சக்க ரம் பொறிக்கப் பெற்ற கற்கள் நடப்பட்டன. சமணர்க் கும் பௌத்தர்க்கும் இறையிலியாக விடப்பட்ட நிலங் களும் இருந்தன. புலவர்க்கு முற்றூட்டாக விடப்பட்ட நிலங்களும் சிற்றூர்களும் கல்வெட்டுக்களில் காணப்படு கின்றன.85