காலத்தில் நிலம் அளக்கப் பயன்பட்ட கோல் சுந்தர பாண்டியன் கோல் எனப்பட்டது. இஃது இருபத்து நான்கு அடி நீளமுடையது. குடிதாங்கிக்கோல் என்ற ஒரு கோலும் வழக்கில் இருந்தது. காணம், கழஞ்சு, குன்றி என்பன பொன் முதலியவற்றை நிறுக்கப் பயன் பட்ட அளவைகள். சர்க்கரை முதலிய பொருள்கள் பலம், துலாம் என்னும் நிறை கற்களால் நிறுக்கப்பட்டன.
வரிகள்
சோழராட்சியில் இருந்த வரிகள் அனைத்தும் பாண்டிய நாட்டிலும் வழக்கில் இருந்தன என்று கூறலாம்.
தொழிலும் வாணிகமும்
முத்துக் குளித்தல், சங்கறுத்து வளையல் செய்தல், மீன் பிடித்துப் பதப்படுத்தல், உப்பு விளைவித்தல், நூல் நூற்றல், ஆடை நெய்தல், போர்க்கருவிகள் செய்தல் முதலிய பல தொழில்கள் பாண்டிய நாட்டில் நடைபெற்றன. பீடு மிக்க மாட மதுரையில் பருத்தி நூலாலும், பட்டு நூலாலும், ஒரு வகை எலி மயிராலும் கண்கவர் ஆடைகள் நெய்யப்பட்டு வந்தன என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. முத்துக்களும், பலவகை ஆடைகளும் பிறவும் அயல் நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. அயல்நாடுகளிலிருந்து குதிரைகளும், மது வகைகளும், கண்ணாடிப் பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டன. கொற்கை, தொண்டி, காயல் என்பன புகழ்பெற்ற கடற்றுரைப் பட்டினங்களாக விளங்கின.
பாண்டிய நாட்டு மெல்லிய ஆடைகளும், பெயர் பெற்ற முத்துக்களும் மௌரியப் பெருநாட்டில் வாணிகப் பொருள்களாக விளங்கின என்பது சாணக்கியர் எழுதிய பொருள் நூலால் தெரிகிறது. பாண்டிய நாட்டு முத்துக்கள் ரோமப் பெருநாட்டில் பெருவாரியாக விற்பனையாயின. ரோமப் பெருநாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையே நெடுங்காலமாக வாணிகத் தொடர்பு இருந்து வந்தது. ரோம் நாட்டு மக்களுள் ஒரு பகுதியினரான87