பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II. பாலாற்றங்கரை நாகரிகம்

1. நாட்டு வளம்

பாலாற்றின் தோற்றமும் போக்கும்

மைசூர் நாட்டிலுள்ள நந்திமலையில் பாலாறு தோற்ற மெடுக்கிறது. இங்ஙனம் தோற்றம் எடுக்கும் பாலாறு மைசூர் நாட்டிற் பாய்கிறது. அங்கு இதன் நீர் கோலார்த் தங்கச் சுரங்கத்துக்குப் பெரிதும் பயன்படுகிறது. பின்பு இவ் யாறு வட ஆர்க்காடு மாவட்டத்தில் பாய்ந்து அந் நிலப் பகுதியை வளப்படுத்துகிறது; பின்னர்ச் செங்கற் பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த காஞ்சீபுரம் தாலுக்காவில் புகுந்து, செங்கற்பட்டுத் தாலுக்காவிலுள்ள சதுரங்கப் பட்டணத்திற்கு அருகே கடலில் கலக்கின்றது.

இதன் துணை ஆறுகளுள் சிறந்தவை செய்யாறு, வேகவதி என்பன. செய்யாறு வட ஆர்க்காடு மாவட்டத் தில் தோற்றமெடுக்கிறது. வேகவதி ஆறு காஞ்சீபுரம் தாலுக்காவில் தோன்றுகிறது. இவை இரண்டும் வாலாஜா பாத்து என்னும் ஊருக்கருகில் பாலாற்றில் கலக்கின்றன. இங்ஙனம் மூன்று ஆறுகள் ஒன்று சேரும் இடம் திருமுக்கூடல் எனப் பெயர் பெற்றுள்ளது. பாலாற்றின் நீளம் 230 கல். இது பல இடங்களில் அகன்று தோன்று கிறது. செங்கற்பட்டிலிருந்து மதுராந்தகம் செல்லும் பஸ் பாதையில் பாலாற்றின் குறுக்கே மிகப் பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறே பட்டாளம் என்னும் புகை வண்டி நிலையத்திற்கு அருகில் புகை வண்டி செல்லத் தக்க முறையில் பெரிய பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. புராணங்களில் பாலாறு

ஒரு காலத்தில் நந்திமலைமீது வசிட்டர் தவம் செய் தனர். அவரது இல்லத்தில் காமதேனு என்னும் தெய்வப்

8