பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர்தோறும் பள்ளிகள் இருந்தன. அவற்றிலிருந்த ஆசிரியன்மார் பாலாசிரியர், கணக்காயர் எனப் பெயர் பெற்றனர். அவர்கள் இயற்றிய பாக்கள் புறநானூறு முதலிய சங்க நூல்களில் காணப்படுவதால், அவர்தம் தமிழ்ப் புலமை நன்கு புலப்படும். கடைச்சங்கப் புலவர் தலைவரான நக்கீரர் மதுரைக் கணக்காயனார் மகனார் என்பது இங்கு அறியத்தகும்.

சங்ககாலத்திற்குப் பிறகும் பாண்டிய நாடு சமயப் புலவர்களையும் பிற புலவர்களையும் ஈன்று வந்தது. வைணவப் பெரியார்களாகிய பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் என்னும் ஆழ்வார்களும் கல்வித்துறையிலும் சமயத் துறையிலும் சிறந்து விளங்கினர். பௌத்த சமணப் பெரியார்களும் கல்வி கேள்விகளில் சிறந்து பல தமிழ் நூல்களைச் செய்துள்ளனர். பிற்காலச் சோழர் காலத்தில் சைவ, வைணவப் பெரியார்கள் பல மடங்களின் தலைவர்களாக இருந்து பொதுக் கல்வியையும், சமயக் கல்வி யையும் புகட்டி வந்தனர் என்பதைக் கல்வெட்டுக்களால் அறிகின்றோம்.

சமயநிலை

பாண்டியருள் பெரும்பாலர் சைவர். பாண்டியர் குல தெய்வமே மதுரை மீனாட்சியம்மன். ஆயினும் பாண்டிய மன்னர் சங்ககாலத்தில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களை நன்கு வளர்த்து வந்தனர். பிற்காலத்தில் சமயப் போர் நிகழ்ந்ததின் பயனாக சைவமும் வைணவமுமே செல்வாக்குப் பெற்றன.

கோவில்களில் திங்கள்தோறும் விழாக்கள் நடைபெற்றன. அரசர்களும் பிறரும் கோவில்களுக்கு வேண்டிய நிலங்களையும் நகைகளையும் வழங்கினர். சிவன் கோவில்களில் தேவாரப் பதிகங்களும், பெருமாள் கோவில்களில் திருவாய் மொழியும் ஓத நிபந்தங்கள் விடப்பட்டிருந்தன. கோவில்களால் கட்டடக்கலை வளர்ச்சி பெற்றது. கற்களில்89