தமிழ்ச்சங்கம்
பாண்டியர் தலைநகரமான மதுரையில் 1800 ஆண்டுகட்குமுன் தமிழ்ச்சங்கம் ஒன்று இருந்தது. பாண்டியர் அதனை வழிவழியாக வைத்து நடத்தி வந்தனர். கபிலர், பரணர், நக்கீரர் போன்ற புலவர் பலர் அச்சங்கவுறுப் பினராக இருந்தனர். பாண்டியர் புலவர் கூட்டுறவினால் தமிழறிவு சிறக்கப் பெற்றனர்; சிலர் கவிபாடும் ஆற்றலும் பெற்றிருந்தனர். அரச மகளிரும் தமிழ்ப்புலமை எய்தியிருந்தனர். பைந்தமிழ்ப் புலவர்கள் வேண்டும் போது பாண்டிய மன்னர்க்கு அறிவுரை வழங்கும் செல்வாக்கும் பெற்றிருந்தனர்.
மதுரையில் இருந்த புலவர்கள்
மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார், மதுரை ஓலைக் கடைக்கண்ணம் புகுந்தராயத்தினார், மதுரைக்கணக்காயனார், மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார், மதுரைத் தமிழ்க்கூத்தனார், மதுரைப் படைமங்க மன்னியார், மதுரை மருதனிளநாகனார், மதுரை வேளாளன், மாங்குடி கிழார், மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் முதலிய புலவர் பெருமக்கள் சங்ககாலத்தில் மதுரையில் இருந்தனர்.
பெண்பாற் புலவர்
பூதப்பாண்டியன் மனைவியார், பறம்பு நாட்டை ஆண்ட பாரியின் மகளிர், ஒக்கூரில் பிறந்து வளர்ந்த மாசாத்தியார், கொற்கையை அடுத்த மாறோக்கம் என்ற ஊரைச் சேர்ந்த நப்பசலையார் முதலியோர் சங்ககாலப் பாண்டிய நாட்டில் புகழுடன் இருந்த பெண்பாற் புலவராவர்.
நக்கீரர்
இவர் சங்கப் புலவர்தம் தலைவர். சொற்குற்றம் பொருட் குற்றம் முதலிய குறைகள் இல்லாமல் கவிபாடும் ஆற்றல்91