பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கி மாங்குடி மருதனார் கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது.
நெடுநல்வாடை
நெடுஞ்செழியன் பகைவரோடு போர் புரியச் சென்றான். அவனைப் பிரிந்து வருந்தினாள் தலைவி. அவளது வருத்தம் நீங்கும்படி 'பாண்டியன் பகை முடித்துக் கடிதில் மீள்வானாக' என்று கொற்றவையை வேண்டும் ஒருத்தி கூறியதாகப் பாண்டியன் நெடுஞ்செழியன் மீது மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது இது. தலைவனது பிரிவாற்றாமையால் இரங்கும் தலைவிக்கு வாடைக் காலத்தின் ஒரு பொழுது ஓர் ஊழிபோலத் தோன்றி நெடிதாகிய வாடையாய் அமைந்தது ஆதலாலும், அரசன் இல்லற வாழ்க்கையில் மனமற்று வேற்றுப் புலத்தில் தங்கி வெற்றி பெறுவதற்குக் காரணமான நல்லதாகிய வாடை அமைந்தமையாலும் இப்பாடல் நெடுநல் வாடை எனப் பெயர் பெற்றது.
பரிபாடல்
இதுவும் சங்ககாலத்து நூல், மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் கோவில் கொண்டுள்ள முருகப் பெருமானைப் பற்றியும், வையையாற்றைப்பற்றியும், திருமாலைப் பற்றியும் பல பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. முருகப் பெருமான் தோற்றம், அவன் வீரச் செயல், அவன் பக்தர்களுக்கு அருள் புரிதல் முதலிய செய்திகள் முருகப் பெருமானைப் பற்றிய பாடல்களில் இடம் பெற்றுள்ளன. வையையாறு பெருக்கெடுத்து வருதல், ஊர்களையும் வயல்களையும் அழித்தல், மதுரை மாநகரத்து மக்கள் மகிழ்வோடு புது நீராடுதல், மார்கழி நோன்பு கொண்டாடுதல், வையைக்கு வாழ்த்துக் கூறல் முதலிய சுவை பயக்கும் செய்திகள் பல வையை பற்றிய பாக்களில் இடம் பெற்றுள்ளன. திருமாலின் பத்து அவதாரங்கள், அப்பெருமானது உருவ வருணனை, அவன் தாங்கியுள்ள94