பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யம்மை குறம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றின் பாடல்கள் தேனினும் இனிமை பயப்பவை. தமிழ்ப் புலவர்களும் சிவநெறிச் செல்வர்களும் இவற்றை மனப்பாடம் செய்தல் வழக்கம். இவை திருமலை நாயக்கர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை

பிற புராணங்கள்

மாணிக்க வாசகர் பிறந்து வளர்ந்த திருவாதவூர் பற்றிய புராணம்,அவர் பெரிதும் விரும்பி வழிபட்ட திருவுத்தரகோச மங்கைபற்றிய புராணம் என்பன உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்ட புராணங்கள். இவை அவ்வத்தலங்களின் அமைப்பு, மக்கள் பழக்க வழக்கங்கள், ஆடை அணிகள், நாகரிகம், பண்பாடு முதலியனவற்றை நன்கு அறிவிப்பனவாகும்.


5. கலைச் சிறப்பு

கட்டடக்கலை

வையை பாயப் பெற்ற பாண்டிய நாட்டில் நாகரிகக் கலைகளான கட்டடக் கலை, ஓவியக் கலை,சிற்பக் கலை, இசைக் கலை, நடனக் கலை, நாடகக் கலை என்பன நன்கு வளர்ந்தன. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டியர் காலத்திலேயே நகர அமைப்பு, அரண்மனை அமைப்பு, கோவில் அமைப்பு, மாளிகை அமைப்பு முதலியவற்றைத் தமிழர் நன்கறிந்திருந்தனர் என்று சங்க நூல்கள் கூறுகின்றன. மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோவில், கோபுரங்கள், அகன்ற மண்டபங்கள், உயர்ந்த விமானங்கள், நீண்டு அகன்ற திருச்சுற்றுக்கள், இவ்வாறே திருமலை நாயக்கர் மகால், மதுரைப் புது மண்டபம், அழகர் கோவில் முதலியனவும் பாண்டியர், நாயக்கர் காலக் கட்டடக் கலைத்திறனை நன்கு விளக்குவனவாகும். இக்கலை 97

7