ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி. 67
பிறிதொருவர்க்கு நட்பை உருவாக்கித் தருதலும் ஒரு கலை. ஒரே வழி நட்பிற் பிரிவு வரும்பொழுது, பிரிவினை நீக்கி நட்பை இசைத்து வைத்தல் ஒரு பண்பு. மானிடத்தின் வாழ்வியலோடிசைத்த நம் கடவுள், நற்றமிழ் ஆரூரர்க்குச் சேரமான் பெருமாள் நாயனாரை நட்பாக அறிமுகம் செய்வித்து, நட்பு ஏற்படுத்தித் தந்தது ஓர் அரிய கலை: பண்பாடு. சுந்தரருக்காகத் திருவாரூர் நெடுவீதியில் பரவை யாரிடம் துரதாக நடந்து செல்கிறார் சிவபெருமான். சிவபெருமானிடம் மாறாத பக்தி பூண்ட ஏயர்கோன் கலிக்காமருக்கு இது பிடிக்கவில்லை. அவர் பார்வையில், பெண்களிடம் சமாதான்ம் செய்வதற்குக் கடவுளைத் தூதராக அனுப்பியது தகாதது என்று நினைக்கிறார். சுந்தரர் மீது ஏயர்கோனுக்குக் கோபம் பிறக்கிறது. சிவபெருமான் செய்யாதன எல்லாம் செய்து, சுந்தரருக்கும் ஏயர்கோன் கலிக்காமருக்கும் இடையே உறவை உண்டாக்குகிறார். இது உயிர்ப்புள்ள வாழ்வுத் தொண்டு.
திருவொற்றியூரில் சுந்தரர் மனம் சங்கிலியார் பால் சார்கிறது. வழக்கம்போல சுந்தரர் இறைவனை அணுகினார். நட்புக் கருதிச் சிவபெருமான் அதனை மறுத்தற்கியலாது, சங்கிலியாரிடம் துது செல்கிறார். கடனுக்காகவன்றி, உணர்வு பூர்வமாகச் செல்கிறார். சங்கிலிக்கு மணாளனாக வாய்க்கப்போகும் ஆரூரரைப் பற்றி மிக அழகாக-உயர்வாக அறிமுகம் செய்கிறார். அன்பர்கள் தங்களுடைய நண்பர்களை வாய்ப்பேற்படும் பொழுது எவ்வளவு கவனமாகவும், எவ்வளவு உயர்வாகவம் பிறர்க்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டுமென்பதற்கு இந்த அறிமுகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. .