பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இ குன்றக்குடி அடிகளர்

ஊட்டினார்கள். உடன், திருஞான சம்பந்தர் "தோடுடைய செவியன்” என்று எடுத்து திருநெறிய தமிழ் பாடியருளினார். அன்னை பராசக்தியின் திருமுலைப்பாலும் சிவஞானமும் திருஞானசம்பந்தருக்குத் தமிழறிவையே தந்தன என்பது தான்ே உண்மை! அதனால் அம்மையப்பரின் மொழி தமிழ் என்றும், சிவஞானம் தமிழ் தழிஇயது என்றும் கூறுவது மிகையன்றல்லவா?

மேலும் சம்ஸ்கிருத நான்மறையோர்கள், இறைவனின் திருவுளக் குறிப்பறியாமல் அவன் திருமுன்பில் வலுக்கட் டாயமாக மறைகளை ஒதுகின்றனர். அவற்றால் அவனுக்கு இனிய ஓசையும் கிடைக்கவில்லை; பொருளும் கிடைக்க வில்லை; அதோடு இட முரண்பாடும் மலிந்து இருந்தமை உணரலாம். இதனால் சலிப்படைந்த இறைவன், திருஞான சம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் காசுகள் தந்து தமிழிற் பாடச் சொல்லி கேட்கின்றானோ என்னவோ? இதனைச் சுந்தரர் தேவாரத்தால் அறிய முடிகிறது’

நமது சமய நூல்கள் கூறும் நான்மறைகள், ஆகமங்கள் ஆகியவை தமிழ் வழக்கிற்கு உடன்பட்டனவேயாம். அவை இன்று வழக்கிற்குக் கிடைக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். வடமொழிக்கு ஏற்றம் கொடுத்து நூல் செய்த மாதவச் சிவஞான முனிவரே, தமிழில் மறைகள் உண்டு என்பதனை ஏற்றுக்கொண்டு காஞ்சிப் புராணத்தில் அருளிச் செய்துள்ளார்: இக்கருத்தினையே திருமுறை கண்ட புராணமும் வலியுறுத்துகிறது." இதனைத் தொல்காப்பியம்", புறநானூறு' திருமுறைகள்" முதலியனவும் வற்புறுத்து கின்றன. எனினும் சிவாகமக் கருத்துக்கள் தமிழ் நெறிக்கு முற்றிலும் புறம்பானவையாக இருத்தற்கில்லை. அவற்றை ஏற்புழி எடுத்துக் கொள்வதில் யாதொரு தடையும் இல்லை.