பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

ஆழ்வார்களின் ஆரா அமுது


என்பது ஆழ்வாரின் அநுபவம். இந்தப் பாசுரத்தில், எல்லா அழகுகளையும் சேர்த்துக் கொண்டு, திருமேனி என்ற நீலச்சோதி ஆழ்வாரைப் படுத்திய பாடு வெளிப்படு கின்றது. ஓர் அவாந்தரப் பிரளயத்தில் கிளைகள் பலவாய், மிகப் பெரியதாய், வளர்ந்திருப்பதொரு ஆலமரத்தின் ஒரு சிறு பசுந்தளிரிலே தாயும் தந்தையும் இல்லாத ஒரு தனிக் குழவியாய்ப் பள்ளிகொண்டு எல்லா உலகங்களையும் தன் திருவயிற்றிலே வைத்து நோக்கி யருளின திருவரங்கப் பெருமானது சகல திருவாபரணங் களாலும் அலங்கரிக்கப்பெற்றுள்ள கரிய திருமேனி எனக்குச் சேவை சாதித்து என் நெஞ்சினது காம்பீர்யத்தைக் கொள்ளை கொண்டு போயிற்றே!" என்கின்றார். நீலமேனியின் மாசற்ற அழகு கடலாக வெள்ளமிட்டு வர, அதனை நெஞ்சால் அநுபவிக்கப் பாரிக்கின்றார்; அந்த அழகினை முடிவில்லதோர் எழில்’ என்று பாடிப் சரவசமாகின்றார். ஆனால், அந்த அழகு வெள்ளத்தில் சுருட்டிய பேரலையொன்று இவர் நெஞ்சை இழுத்துக் கொள்ள, ஐயோ! என் நெஞ்சையும் இழுத்துக் கொண்டதே: எ ன் று ஏங்குகின்றார். ஐயோ!" என்பதற்குப் பெரியவாச்சான்பிள்ளை, பச்சைச் சட்டை உடுத்துத் தனக்குள்ளதை அடையக் காட்டி எனக்குள்ளதை அடையக் கொண்டானே!" என்பர். நான் எல்லாவற்றை யும் நின்று நின்று அதுபவிக்க வேண்டும் என்றிருக்க அது பவபசிகரமான என் நெஞ்சைத் தன்பக்கவிலே இழுத்துக் கொள்வதே! ஐயோ! என்கின்றார் என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். இந்த அநுபவத்தின் எதிரொலிதான், ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியாஅழ குடையான்' 25. கம்ப. அயோத். கங்கைப் படலம்-1.