பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மூவர் ஏற்றிய மொழிவிளக்கு" தமிழ்ச் சங்கச் சான்றோர்களே, பாக்காலாப் பெரு மக்களே. வணக்கம். பெளத்த சமயத்தில் சங்கம் மக்களை இணைக்கும் ஒரு பேரமைப்பாகத் திகழ்ந்ததை வரலாற்று மூலம் அறிகின்றோம். அங்ங்ணமே மதுரையில் மூன்று சங்கங்களை அமைத்த பெருமை தமிழ் மக்களுக்கு உண்டு. இந்த நூற்றாண்டில் மதுரையில் நான்காவது சங்கம் அமைத்த பெருமை பாண்டித்துரைத் தேவருக்கு உண்டு. இந்த மரபினையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பிழைப்பின் நிமித்தம் வந்தவர்களாகிய நீங்கள் பாக் காலாவில் தமிழ்ச் சங்கம் அமைத்த பெருமை பாக்காலா இருப்பூர்தித் துறையில் பணியாற்றுவோருக்கும், குறிப்பாக நலவாழ்வுத்துறை அலுவலர் திரு. சகதீசன் அவர்கட்கும் ஆசிரியர் திரு. ஜி. கோபாலகிருட்டிணன் அவர்கட்கும் இப் பகுதித் தமிழ் மக்கள் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றனர். இன்று உங்கள் முன் மூவர் ஏற்றிய மொழிவிளக்குப் பற்றிப் பேச முன் வந்துள்ளேன், நடுநாட்டுத் திருப்பதி களுள் ஒன்றாகிய திருக்கோவலூரில் ஓரிரவு நடைபெற்ற நிகழ்ச்சி: கதிரவன் மறைந்த பின்னர் வானம் இருண்டு

  • திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தின் விரிவுச்சொற் பொழிவுத் திட்டத்தின்கீழ் 5.2.1967 இல் பாக்காலா தமிழ்ச் சங்கத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு.