பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 79, விடுகின்றது. மழை பெய்யப்போகும் அறிகுறிகள் தோன்று கின்றன. இந்நிலையில் தூறலில் நனைந்து கொண்டே மிருகண்டு என்ற ஒர் அந்தணர் இல்லத்திற்கு வருகின்றார் ஒருவர்: மழைக்கு ஒதுங்கவும் இரவு நேரத்தைக் கடக்கவும் இடங்கேட்கின்றார். இல்லத்துக்குரியவர் வீட்டின் முன் புறமுள்ள இடைகழி (ரேழி என்பது உலக வழக்கு) யைக் காட்டி அதில் ஒருவர் படுக்கலாம் என்று கூறி இடம் கொடுத்துக் கதவினைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே போய் படுத்துக் கொள்ளுகின்றார். முதலில் வந்தவர் பொய்கையாழ்வார். மழையோ வலுக்கத் தொட்ங்குகின்றது. சிறிது நேரத்தில் இன்னொருவர் வந்து அதே வீட்டில் தங்க இடம் கேட்கின்றார். பொய்கையார் ஒருவர் படுக்க லாம் இருவர் இருக்கலாம் என்று கூறிக் கொண்டே வந்தவருக்கு இடம் தருகின்றார். இவர்தான் பூதத்தாழ்வார். மேலும் சிறிது நேரம் கழிந்ததும் மூன்றாவதாக மற்றொருவர் அதே இல்லத்திற்கு வந்து ஒதுங்க இடம் வேண்டுகின்றார். இடைக்கழியிலிருந்த இருவரும், ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம்: என்று கூறிக் கொண்டே அவரையும் அழைத்துக் கொள்ளு கின்றனர். இப்போது வந்தவர் பேயாழ்வார். இன்கவி பாடும் பரம கவிஞர்களாகிய இம்மூவரும் இறைவனுடைய திருக்குணங்களைப் போற்றிப் புகழ்ந்து பாடியவ்ண்ணம் இருக்கின்றனர். இவர்கள் மூவரும் ஒருவரையொருவர் முன்பின் அறியாதவர்கள். இந்நிலையில் குரல் கொடுக்காது, உள்ளே நுழை வதற்கு இசைவும் பெறாது நான்காமவராக யாரோ 1. திருக்கோவலூர்: 108 திவ்விய தேசங்களுள் ஒன்று. விழுப்புரம் - காட்டுப்பாடி இருப்பூர்தி நிலையத்திலிருந்து சுமார் 2 இல் தொலைவிலுள்ளது. 2. வாயிலுக்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட ஒடுக்க மான இடம். வடமொழியில் இது தேஹளி என்று வழங்கப் பெறும்.