பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 89 (2) திருமாவின் அவதாரங்கள் பலவற்றினுள்ளும் திருவிக்கிரமாவதாரச் செயல்கள், ஏனமாகி இருநிலம் கீண்ட செய்தி, கிருட்டிணாவதாரத்தில் நிகழ்ந்த பல்வேறு வீரச் செயல்கள், இராமவதாரத்தில் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் இந்த ஆழ்வார்களின் பாசுரங்களில் அதிகமாக இடம் பெற்றுள்ளன. ஈண்டு ஒன்றிரண்டைக் காட்டுவேன். திரிவிக்கிர மாவதாரம்: பார்.அளவும் ஓர் அடிவைத்து ஒரடியும் பார்உடுத்த நீர் அளவும் செல்ல கிமிர்ந்ததே (3), சேவடியை நீட்டி திசை கடுங்க விண்துளங்க மாவடிவின் அேளந்த மண் (9) அடியும் படிகடப்ப தோள்திசைமேல் செல்ல முடியும் விசும்பு அளந்தது srstruit (17) கின்று கிலம்.அங்கை கீர்ஏற்று மூவடியால் சென்று திசைஅளந்த செங்கண் மாற்கு (21) ஏழ்உலகும் தாயினவும் எண்திசையும் போயினவும் சூழ்அரவப் பொங்கணையான் தோள் (52) என்று பொய்கையார் இந்த அவதாரத்தில் ஈடுபடுவதைக் காணலாம்.