பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

ஆழ்வார்களின் ஆரா அமுது


விளங்கணிக்குக் கன்று எறிந்து (23) மாவாய்ப் பிளந்த மகன் (28) மகனாகக் கொண்டுஎடுத்தாள் மாண்புஆய கொங்கை அகன் ஆர உண்பன் என்று உண்டு (29) முலைசூழ்ந்த கஞ்சுரத்துப் பெண்ணை கவின்றுஉண்ட நாவன் (49) ஏறுஏழும் வென்று அடர்த்த எங்தை (63) கதவி கதம் சிறந்த கஞ்சனை முன்காய்ந்து அதவி போர்யானை ஒசித்து (89) (கதவி - கோபித்து; கதம் - சினம்; அதவி . கொன்று) அடியால்முன் கஞ்சனைச் செற்று (92) குடம் ஆடிக் கோவலனாய் மேவி (18) விழவின்காய் கன்றினால் வீழ்த்தவனே (100) என்ற பாசுரங்களில் ஆழ்வார் ஆழங்கால்பட்டு அநுபவிப் பதைக் கண்டு நாமும் அநுபவிக்கலாம். இனி, பேயாழ்வார் கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபட்டுக் களிப்பதைக் காண்போம். தூநீர் உலகம் முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி - விழுதுண்ட