பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 99 மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் நமக்குத் தஞ்சம் - என்ற ஆன்றோர் வாக்கையும் சிந்தித்து மகிழ்கின்றோம். திருமலைக் காட்சிகள்: பெரும்பாலும் எல்லா ஆழ்வார் களும் அர்ச்சாவதாரத்தில்தான் அதிக ஈடுபாட்டைக் காட்டுவதைப்போல் இந்த மூவரும் அந்நிலையிலேயே அதிகம் ஈடுபடுகின்றார்கள். பூகதஜலம் போலே அந்தர்யாமித்வம்: ஆவரண் ஜலம் போலே பரத்வம்: பாற்கடல் போலே வியூகம்; பெருக்காறு போலே விபவம் அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்: என்ற வாக்கியத்தை சிந்திக்கின்றோம். இதில் அதில், தேங்கின மடுக்கள்போலே அர்ச்சாவதாரம் என்பதே கண்டு நாம் சிந்திக்கவேண்டியது. பூமியில் இருக்கின்ற திருக்கோயில்களிலும் அடியார்களுடைய திருமாளிகை களிலும் என்று பல இடங்களிலும் எழுந்தருளியிருக்கும் நிலைகளை நினைந்து மடுக்கள் போலே என்று பன்மை யால் அருளிச் செய்தபடி. அவதாரங்களின் குணங்கள் எல்லாம் அர்ச்சையினிடத்து குறைவற்று நிறைந்திருக்கை யாலும் அவதாரங்களின் திருவுருவங்களை அர்ச்சை வடிவ மாகப் பலவிடங்களில் மேற்கொண்டிருக்கையாலும் அதிலே தேங்கின மடுக்கள் போலே" என்கின்றார். பெரும்பாலும் திருக்கோயில்கள் அமைந்திருக்கும் இடங்கள் இயற்கைச் சூழ்நிலையில் மிக அழகாக அமைந்: திருக்கும். அதனால் கவிஞர்கள் அங்குள்ள கருப்பொருள் களை வைத்துக்கொண்டே அழகிய காட்சிகளைச் சித்திரித் துக் காட்டுவர். சித்தும் அசித்தும் ஈசுவரனுக்கு ஊடலாக 15. பூரீவசன. பூஷ. 42.