பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

ஆழ்வார்களின் ஆரா அமுது


அமைந்திருக்கும். இந்த உறவினைச் சரீர - சரீரி பாவனை. என்று போற்றுவர் வைணவப் பெருமக்கள். அசித்தும் எம்பெருமான் படைப்பாதலால், அதுவும் வழிபாட்டிற் குரியது. சென்று சேர்திரு வேங்கட மாமலை ஒன்று மேதொழ கம்வினை ஒயுமே: என்ற நம்மாழ்வார் பாசுரம் இக் கருத்திற்கு அரண் செய்வ. தாக அமைகின்றது. அசித்தின் பெயரைச் சொன்ன வுடனேயே எம்பெருமான் மனம் மகிழ்ந்து நமக்குத் திருவருள் பாலிக்கும் பெருமை பேசப்பெறுகின்றது. திருமா லிருஞ்சோலை மலைஎன்றேன்; என்னத் திருமால் வந்துஎன் நெஞ்சுநிறையப் புகுந்தான்' என்ற திருவாய் மொழிப் பாசுரப் பகுதி இதற்குச் சான்றாக நிற்கின்றது. எனவே, அன்பர்களே, அசித்தாகிய வேங்கட மலையில் சில காட்சிகளைக் காண்டலும் இறையதுபவம் பெறுவதாக அமைகின்றது. இத்தகைய பல அழகிய காட்சி களை நமக்கு ஆழ்வார் பெருமக்கள் காட்டிச் செல்கின் நறனர். அவற்றுள் சிலவற்றை ஈண்டு எடுத்துக் காட்டுவேன், பொய்கையார் காட்டுபவை : காட்சி 1: திருவேங்கட மலையில் வாழும் குறவர்கள் தங்கள் தினைப் புனங்களில் பட்டி மேயும் யானையைத் துரத்துவான் வேண்டி பரண் கவிலிருந்தபடியே தங்கள் கையிலிருந்த பெரிய மாணிக்கக் கட்டியை யானையின்மீது எறிகின்றனர். அப்போது, அங்குத் திரியும் மலைப்பாம்புகள் யானைமீது பட்ட இரத் தினத்தைக் கண்டு, யானையை மேகமாகவும் இரத்தி னத்தை மின்னலாகவும் எண்ணி மயங்குகின்றன; மின்ன லுடன் இடிதோன்றும் என அஞ்சி அப்பாம்புகள் புற்றினுள் புகுந்து கொள்கின்றன. 16. திருவாய் 3.3:8 17. டிெ. 10.8:1