பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

ஆழ்வார்களின் ஆரா அமுது


தேனீக்கள் சூழ்ந்து மொய்த்துக் கொண்டுள்ளன. ஆண்யானை அண்மையிலுள்ள மரத்தினின்று ஒரு தழைக் கொத்தினை ஒடித்து அதனைக் கொண்டு அம்மழலை வண்டுகளை ஒச்சுகின்றது. பிறகு அந்தத் தேனடையினை அப்படியே அசையாமல் தன் துதிக்கையினால் வாங்கிச் சூல் நிறைந்து பருகுவதற்கும் சிரமப்படும் தன் பிடியின் வாயில் வைத்துப் பருகுமாறு செருகுகின்றது. இந்த யானை மூங்கில் குருத்தினை விரும்பவில்லை. கல்கத்தா கரஸ்குல்லா போல் தேனடையை மட்டிலும் அளிக்க விரும்புகின்றது போலும். முன்னோர் மொழிப் பொருளே பன்றி அவர்மொழியும் பொன்னேபோல் போற்றுவம்?? என்னும் தமிழ் இலக்கிய மரபினையொட்டிப் பாடும் இயல்பினையுடையவர் நம் கவிஞர்கள் என்பதை இப் பாசுரங்கள் காட்டுகின்றன. பூதத்தாழ்வாரைத் திருமங்கை வாழ்வாரும் இவர்கள் இருவரையும் கம்பநாடனும் பின்பற்றி இருப்பதைக் கண்டு மகிழலாம். இதனால் ஒருவரை யொருவர் பார்த்தெழுதினார் என்று கூறுதல் கூறுவோரின் கடுகுள்ளத்தைக் காட்டுகின்றது. காட்சி-2 : திருமலையில் வாழும் வானரங்கள் எம் பெருமானுக்குச் செய்யும் பூசனைகளைக் காட்டுகின்றார். போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு ஆங்கலர்ந்த போதரிந்து கொண்டேத்தும் போதுஉள்ளம்-போதும் மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல அணிவேங் கடவன்பேர் ஆய்ந்து.' போது . விடியற்காலம்; போது - மலர்; அரிந்து. கொய்து; பேர் . திருநாமம்; போது . மலர்1. 23. நன்னூல்.9. 24. இரண். திருவந்-72.