பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

ஆழ்வார்களின் ஆரா அமுது

என்பது ஆழ்வாரின் திருவாக்கு. கடவுளுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்ற வினாவுக்கு ஆழ்வார் கூறும் மறுமொழி இது. தமர்உகந்த(து) எவ்வுருவம் அவ்வுருவம் தானே தமர்உகந்த(து) எப்பேர்மற்(று) அப்பேர்: !தமர் - அடியார்கள்; உகந்தது - விரும்பியது; பேர் . திருநாமம்; பக்தர்கள் எந்த உருவத்தை விரும்புகின்றார்களோ அந்த உருவத்தையே இறைவன் தன் உருவமாக அங்கீகரிக் கின்றான். பக்தர்கள் அவனையே சார்ந்திருப்பவர்கள்; அவன் சொரூபமோ பக்தர்களின் விருப்பத்தைச் சார்ந் திருக்கின்றது; அவனையே நம்பி அன்பு செய்கின்றவர்கள் உகப்பதுதான் அவனுக்குத் திருமேனி - அவனுக்குத் திருநாமம்! எவ்வளவு பொருத்தமான கொள்கை: * கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்தான்' என்று விவிலியம் விளக்குகின்றது. மனிதன் தன் சாயலில் கடவுளைப் படைத்துக் கொள்ளுகின்றான்!” என்ற கொள்கையையும் ஆழ்வார் அங்கீகரிக்கின்றார். ஞானம் என்பது உலகில் பலவிதம்: அளவை நூல் (தருக்கம்) படித்து வாதங்கள் செய்யத் தேர்ச்சி பெற்ற வனும் தன்னை ஞானி என நினைக்கின்றான்; ஆயுர்வேதம், மந்திரம், தந்திரம் முதலியவற்றில் கை தேர்ந்தவனும் தன்னை ஞானி என நினைத்துக் கொள்ளுகின்றான். இப்படி ஒவ்வொரு தகுதி பெற்றவனும் தன்னை ஞானி என நினைத்துக்கொண்டால் உண்மையான ஞானம் எது? உண்மையில்,ஞானி என்பவன் எவன்? என்கின்ற வினாக் களுக்கு சாத்திரங்கள் கூறும் விடை - எம்பெருமானை 39. முதல். திருவந். 44.