பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிள்க்கு 315

  • சலிக்கும்" என்ற வினையால் கண்டும் காணாமை குறித்தவாறாகும். இனி, மதம் எதை ஏத்தி அறிந்தேம் என்னும்" என்றது. நாத்திகத்திற்கு இல்லதாகவும், சாத்திரங் கட்கு, உள்ளதும் இல்லதுமாகவும் இருக்கும் பரம்பொருள், ஏத்திய மதங்கட்கெல்லாம் உள்ளதேயாம் என்று புலப் படுத்துகின்றார். இதனை அறிதற்கு வாயிலும் கூறு கின்றார். ஏத்தியறிந்தேம் என்றலால் பரம்பொருளை அறிதற்கு அத்னை ஏத்துத்ல்ே வாயில் என்று காட்டியதைக் கண்டு மகிழலாம். இஃது இடைப்பிறவரலாக இருப்பது போல் தோன்றினும் சிந்தனைக்குரியது.

விண்ணும் மண்ணும் படைப்பு அழகுகளாலும், வேத இருடிக்ளின் கவிதைப் பண்ணழகாலும், புராணங்களும் இதிகாசங்களும் அழகான கதைகளாலும் சுட்டிக் காட்டும் வேதாந்த உண்மைக்குத்தான் பக்தர்கள் திருமலை, திருவரங்கம், திருமாலிருஞ்சோலைமலை முதலான திருத் தலங்களில் அழகான திருக்கோயில்களை எழுப்பியுள்ளார் கள். இந்த மந்திரப் பிரதிட்டைகள் யாவும் வேதாத்த ஞானிகட்கு, சிறு பிள்ளைகள் வரைகிறிக் கோயிலும் பெருமாளும் அமைத்துக் காட்டியது போலவ்ே தோன்றும். எனினும், அந்தப் பிரதிட்டைகளைத் தனக்குப் பிராண பிரதிட்டைகளாகவே கொண்டு எல்லாம் வல்ல இறைவன் சம்சாரிகளுடைய கலக்கங்களைப் போக்குவதற்கு அங்கே வந்து தங்கி விடுகின்றான் என்று பேசுகின்றது சித்தாந்தம். இதனால் இறைவனை வேங்கடத்தாய் விண்ண கராய்! வெஃகா உள்ளாய்! என்று வாய் குளிர அழைப்பதில் பொய்கையாழ்வார் மிக்க மன நிறைவு கொள்ளுகின்றார். எங்கும் அந்தர்யாமியாக இருக்கும் எம்பெருமானை உணரவும் முடியாத ஒரு மாக்கடலாக உவமித்தால், அதிலும் செல்வதற்குரிய இன்பப்டிகாகக் கொள்ளலாம். பத்தர்கள் வழிபடும் திருத்தலங்களையும் "அவன் பாற்கடலில் அறிதுயில் கொண்டிருக்கின்றான்!"