பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii வண்ணங்கள் பாடி நின்றாள் வளர்த்தனள் காதல் தீயை கண்ணுக்குள் அவனே கானும் கனவிலும் அவனே யானாள்! தொண்டரடிப் பொடியாழ்வார் : 2#. 22. விலைமகள் வலையுள் பட்டு வேதனைச் சிறையுள் பட்டு நிலைதடு மாறிப் பின்னர் நிமலனார் அருளி னாலே அலைவிலா உள்ளம் பெற்றே ஆடியவர்க் கடிய ரானார் அலைகடல் மிதப்பான் தொண்டர் அடிப்பொடி யாழ்வார் தாமே! மாலையின் கூறாய்த் தோன்றி மண்ணிலே பிறப்பெ டுத்துக் கோலமா மாயன் தொண்டே குறியெனக் கொண்டு வாழ்ந்து சீலமே கடைப்பிடித்துத் திருவடித் தொண்டர் தொண்டில் ஞாலமே போற்ற வாழ்ந்த நாரணப் பொடிக ளாரே! திருப்பாணாழ்வார் : 23. தீண்டாத பாண்கு லத்தான் துறைவழி நிற்கக் கண்டு வேண்டாத கல்லை வீசிச் சாரங்க முனிவர் சென்றார் ஆண்டவன் நெற்றி தன்னில் அதுபட்டி ரத்தம் கொட்ட மீண்டோடி வந்து தோளின் மீதேற்றிக் கொண்டு சென்றார்.