பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

ஆழ்வார்களின் ஆரா அமுது


சேவியக்கல் சேஷபூதன் இழியும் துறை, பிரஜைமு லையிலே வாய்வைக்குமாப் ఢీur$$ు. ° (சேஷி.தலைவன்: சேஷபூதன்.அடிமை; பிரஜை.. குழந்தை, ! என்ற முமுட்கப்படியின் வாக்கியமும் சிந்திக்கத் தக்கது. பாலுண்ணும் பச்சைப் பசுங்குழவி எங்ஙனம் தாயினுடைய மற்ற உறுப்புகள் யாவையும் விட்டு, தான் உயிர் வாழ்தற் கிடனாய் உள்ள அவள் கொங்கையில் வாய் வைக்கிறதைப் போலவே, சேஷியாகிய ஈசுவரனைப் பற்றப் புகும் சேஷ பூதனும் எம்பெருமானின் பல உறுப்புகளையும் விட்டுத் தான் உய்வதற்கு இடனாய் உள்ள அவன் திருவடிகளையே பற்றுகின்றான். முந்திய செயல் குழந்தைக்கு இயல்பாக, இருப்பதைப்போல பிந்திய செயல் சேத்தின் சொரூபத் திற்கு இயல்பாய் அமைகின்றது. மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல்ஒருங்கள் கைக்காகம் காத்தான் கழல்.' உண்மையான பக்தி பொருந்திய ஞானத்தாலே அவனை உள்ளபடி உணர வல்லவர்கள்தாம் அவனுடைய திருக்கழல் களைக் கண்டு அதுபவிப்பர் என்று கூறுவதால், ஆழ்வாரின் திருக்கழல் நாட்டம் அறியப்பெறுகின்றது. இக்கருத்தையே: இன்னொரு பாசுரத்தில், தாய்காடு கன்றேபோல் தண்துழா யான்அடிக்கே போய்காடிக் கொள்ளும் ឬក៏ចំg.* என்று தெளிவாக விளக்குகின்றார். 50. முமுட்சு.147. 51. முதல். திருவந், 47. 52. டிெ. 30,