பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

ஆழ்வார்களின் ஆரா அமுது

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தின் உள்ளான் என்று ஒர்." (உள்ளுவார் . நினைப்பவர்கள்; வெள்ளம் - கடல்; மேயான் - வசிக்கின்றான்; ஒர் . அறிந்துகொள்ர் என்பது பாசுரம், புருடோத்தம் ஒருவன் உளன்; அவன் என்றும் உள்ளவன்; அன்போடு நினைப்பவர் உள்ளத்தைப் பாற்கடலாகவும், திருமலையாகவும் கொள்ளுகின்றான்!" என்று தமக்குத்தாமே சொல்லிக் கொள்வதுபோல், பிறரோடும் அந்த மகாவிசுவாசத்தையும் இதய சாந்தி யையும் பகிர்ந்து கொள்ளுகின்றார். உள்ளம் தெளியத் தெளிய கடவுள் உண்மையும் தெளி வாகும் என்பது இந்த ஆழ்வார் காட்டும் வழி. உண்மை தெளிவுபெறப் புலன்களை வென்றாக வேண்டும்; அப்போது தான் ஞானம் மெய்ஞ்ஞானம் ஆகும். புந்தியால் சிந்தியா(து) ஓதி உருளண்ணும் அக்தியால் ஆம்பயன் அங்குஎன்?" (புந்தி . புத்தி; அந்தி . சந்தியா வந்தனம்.) - எம்பெருமானை உள்ளீடாகக் கொள்ளாது செய்கின்ற "செபம் - தவம் முதலியவை யாவும் பயனற்றவை யாகும் என்று கூறுவார். ஞன பக்தியால்தான் மனமாசு தீரும்'. ' இந்த பக்தி ஒழுக்கமாகவும் கைங்கரியமாகவும் கனிய வேண்டும். அப்படிக் கணியாத பக்தி மலட்டுப் பக்தி. கைங்கரிய இலக்கணத்தை 57. முதல். திருவந், 99 58. டிெ - 33. 59, டிெ . 43.